சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேசாக மாறும் பாதை.. ஹவருக்கு ஹவர் டிவிஸ்ட் தரும் "நிவர்".. இந்த 3ல் ஒரு இடத்தில்தான் கரையை கடக்கும்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த புயல் தமிழகத்தில் 3 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நிவர் என்னும் புயலாக உருவெடுத்து உள்ளது. தீவிர புயலாக இருக்கும் நிவர் அதி தீவிர புயலாக மாற உள்ளது.

இன்று மாலைக்குள் இந்த புயல் அதி தீவிரமாக மாறும். இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டாலும் நாளை காலைதான் பெரும்பாலும் புயல் கரையை கடக்கும்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்த புயல் தொடக்கத்தில் இருந்தே கொஞ்சம் குழப்பமான புயலாக இருந்து வருகிறது. முதலில் பாண்டிச்சேரி வழியாக ஆந்திர பிரதேசம் வரை செல்லும் என்று இந்த புயல் கணிக்கப்பட்டது. சென்னையில் இருந்து 400 கிமீ தூரம் இருக்கும் வரை இந்த புயலின் பாதை நன்றாகவே இருந்தது.

மாறியது

மாறியது

ஆனால் அதன்பின் லேசாக புயல் குழப்ப தொடங்கியது. சென்னையில் இருந்து 400 கிமீ தூரத்தில் புயல் அப்படியே நிலை கொண்டது. எங்கும் நகரவில்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் புயல் எங்கும் நகராமல் அப்படியே நின்று போனது. ஆனால் அப்படி நிலை கொண்டு இருக்கும் போதே புயல் வலிமை பெற்றது.

லேசாக மாறியது

லேசாக மாறியது

இதன் பின் புயலின் வேகத்தில் லேசாக மாற்றம் ஏற்பட்டு 5 கிமீ வேகத்தில் செல்ல தொடங்கியது. அதோடு இதன் பாதையும் லேசாக மாறியது. லேசாக மேற்கு நோக்கி நகர தொடங்கியது. இதனால் டெல்டா மாவட்டங்களை புயல் தாக்குமோ என்று அச்சம் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் வடமேற்கு திசையில் புயல் பயணிக்கிறது.

எங்கே கடக்கும்

எங்கே கடக்கும்

நிவர் புயல் தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த புயல் தமிழகத்தில் 3 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இப்போது செல்லும் திசையிலேயே சென்றால் இந்த புயல் மஹாபலிபுரம் - கல்பாக்கம் இடையே கரையை கடக்கும்.

மாற்றம்

மாற்றம்

ஆனால் லேசான காற்று மாற்றம் ஏற்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்தால் டெல்டா மாவட்டங்களுக்கு அருகே சென்று கரையை கடக்கும். இன்னொரு பக்கம் இந்த புயல் இப்போது செல்லும் திசையில் சென்று இன்னும் கொஞ்சம் வடமேற்கு பகுதிக்கு திரும்பினால், மொத்தமாக சென்னையில் கூட கரையை கடக்கும்.

இங்கு மூன்று இடம்

இங்கு மூன்று இடம்

இந்த மூன்றில் ஒரு பகுதியில்தான் புயல் கரையை கடக்கும். ஆனால் இதன் பாதை குழப்பம் தருகிறது. இதனால்
கடைசி கட்டத்தில் இந்த புயல் எங்கு வேண்டுமானாலும் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

English summary
Nivar Storm may get landfall in any one of these 3 places in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X