சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வழியில் எதுவும் வரவில்லை.. விடாமல் "மூச்சு" வாங்கும் நிவர்.. வேற மாதிரி உருவெடுக்கிறது.. எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த புயல் நிமிடத்திற்கு நிமிடம் வேகம் எடுத்து வருவதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வெதர்மேனும் இந்த புயலின் வலிமை குறைய வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் நிவர் புயல் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயல் நாளை காலை அல்லது இன்று இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்த புயல் வலிமை குறையுமா? இடையில் எங்காவது வலிமை இழக்குமா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் இந்த புயல் அப்படி அங்கும் வலிமை இழக்க வாய்ப்பே இல்லை என்று வானிலை ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி

எப்படி

பொதுவாக ஒரு புயல் நகர்ந்து செல்லும் போது அதற்கு உள்ளே காற்று செல்லும். புயலின் அடி பாகத்தில் காற்று செல்லும். முன்பே அங்கு இருக்கும் காற்று புயலின் மேல் பாகத்தில் இருந்து வெளியேறும். இதுதான் புயலை உயிர்ப்புடன் வைத்துள்ளது .

உடைந்துவிடும்

உடைந்துவிடும்

ஒரு புயல் புதிய காற்றை உள்ளே இழுக்காமல் பழைய காற்றை மட்டும் வெளியே விட்டாலோ அல்லது புதிய காற்றை உள்ளே இழுத்து பழைய காற்றை வெளியே விடாமல் இருந்தாலே அது உடைந்துவிடும். ஆனால் இந்த நிவர் புயல் அப்படி இல்லை. இந்த புயல் மிக சரியாக புதிய காற்றை உள்ளே இழுத்து பழைய காற்றை வெளியே விடுகிறது.

சிறப்பு

சிறப்பு

இந்த புயல் கண்டிப்பாக வலிமை இழக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். அவரின் போஸ்ட்படி இந்த புயல் புதிய காற்றை பழைய காற்றை வெளியே விடுகிறது. இந்த புயல் நன்றாக சுவாசித்து வருகிறது. இந்த புயலின் சுவாசம் சரியாக இருப்பதால் அது வலிமை இழக்க வாய்ப்பு இல்லை என்று வெதர்மேன் கூறியுள்ளார்.

தாக்கம்

தாக்கம்

அதேபோல் இந்த புயல் செல்லும் பாதையில் காற்றின் வேகம் புயலுக்கு சாதகமாக இருக்கிறது. செங்குத்து காற்றின் வேகம் இங்கு அதிகமானால் புயல் வலிமை இழந்து உடைந்து போகும். ஆனால் அதுவும் இங்கு நடக்கவில்லை என்று வெதர்மேன் கூறியுள்ளார். இந்த புயலின் வழியில் எந்த தடங்கலும் இல்லை.

வேகம்

வேகம்

இந்த புயலின் வழியில் எதுவும் இல்லை என்பதால் கண்டிப்பாக இந்த புயல் வலிமை இழக்காது என்று வானிலை வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த புயலின் வேகம் இன்னும் கூடலாம். நினைத்ததை விட அதிக வேகத்தில் இந்த புயல் வரலாம்.

தாக்கம்

தாக்கம்

145 கிமீ அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் இந்த புயல் கரையை கடக்கலாம் என்று கூறி உள்ளனர். அதோடு இதன் கண் பகுதியும் வலிமையாக இருக்கும் என்று வானிலை வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சேதங்கள் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nivar Storm may not get weak before making landfall in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X