சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிக்காமல் தப்பித்த சென்னை.. எப்படி சாத்தியமானது.. வியந்து போன மக்கள்.. செம்பரம்பாக்கம் சீக்ரெட்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும், நேற்று இரவு புயல் அடித்தும் கூட பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை. மழை காரணமாக சாலையில் தேங்கும் நீர் மட்டுமே சென்னையில் காணப்படுகிறது..

Recommended Video

    Nivar எப்படி கரையை கடந்தது? | Nivar Cyclone | Oneindia Tamil

    நிவர் புயல் தமிழகத்த்தில் கரையை கடந்து தற்போது வலிமை இழந்துள்ளது. சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புயல் கரையை கடந்துள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னையில் தீவிரமாக கனமழை பெய்தது. நேற்று முதல்நாள் காலையில் இருந்து சென்னையில் தீவிரமாக மழை பெய்து வந்தது.

     அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன? அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன?

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம்

    இந்த நிலையில்தான் 24 உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நேற்று எட்டியது. இதன் காரணமாக நேற்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதன் 24 மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தண்ணீர் திறப்பு

    தண்ணீர் திறப்பு

    நேற்று அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அடையாறு ஆற்றில் ஏற்கனவே மழை காரணமாக வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. சென்னை சாலையிலும் தண்ணீர் இருந்தது. தொடர்ந்து மழையும் பெய்தது. ஆனாலும் நேற்று செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட்ட பின் சென்னையில் பெரிதாக எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. அடையாறு கரையோரத்தில் வெள்ளம் ஏற்படவில்லை.

    வெள்ளம் எப்படி

    வெள்ளம் எப்படி

    2015ல் இங்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது இங்கு வெள்ளம் ஏற்பட்டது. 2015ல் தண்ணீர் திறக்கப்பட்ட போது மழை காரணமாக அடையாற்றில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது. அதேபோல் அடையாற்றுடன் இணையும் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் முழுமையாக இருந்தது. இந்த சிறிய ஏரிகளின் தண்ணீர், செம்பரம்பாக்கம் நீர், மழை நீர் எல்லாம் சேர்ந்து மொத்தமாக வந்த காரணத்தால் 2015ல் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சென்னை மூழ்கியது.

    எத்தனை

    எத்தனை

    2015ல் செம்பரம்பாக்கத்தில் 29000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த முறை சரியான திட்டமிடலுடன் தண்ணீர் திறக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முதலில் 2000, பின் 5000, பின் 9000 கனஅடி என்று வெளியேற்றப்படும் கனஅடி நீரில் அளவு மாற்றப்பட்டது. அடையாறு வெள்ளத்திற்கு ஏற்றபடி தண்ணீர் திறப்பு அவ்வப்போது குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    தண்ணீர் குறைப்பு

    தண்ணீர் குறைப்பு

    அதேபோல் அடையாறு ஆறுக்கு மற்ற ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டுமே அங்கு தண்ணீர் சென்றது. இதன் காரணமாக மிகப்பெரிய வெள்ளம் தவிர்க்கப்பட்டது. சரியான நேரத்தில் ஏரியை திறந்தது. அதை முறையாக கண்காணித்தது ஆகிய காரணங்களால் செம்பரம்பாக்கத்தில் இருந்து பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை.

    இல்லை

    இல்லை

    இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து நின்று உள்ள நிலையில், அங்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Nivar Storm: Sembarambakkam didnt make much impact this year comparing to 2015 floods.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X