சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்

நிவர் புயல் நாகை அருகே கரையை கடக்கும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, அல்லது காரைக்கால் இங்குதான் புயல் கரையை கடக்கும். பயப்படாதீங்க.. ஏன்னா, இந்த புயலின் மொத்த 150 ஆரம், 350 விட்டம் ஆகும்.. என்று வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தகட்டூர் செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது.

Recommended Video

    Nivar ராத்திரி 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கும் - Thagatur Selvakumar | Oneindia Tamil

    தீவிர புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 100கி.மீட்டர் முதல் 110கி.மீட்டர் வேகத்திலும் அல்லது 120 கி.மீட்டர் வேகத்திலும் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தும் வருகிறது.

    புயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் புயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

     நிவர் புயல்

    நிவர் புயல்

    இந்நிலையில், இன்றைய தினம் எப்படி இருக்கும், நிவர் புயலின் ன்மை குறித்து வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தகட்டூர் செல்வகுமாரிடம் ஒன் இந்தியா சார்பாக பேசினோம்.. அவர் நம்மிடம் சொன்னதாவது: "வங்ககடலில் நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் சற்று நேரத்தில் நிவர் புயலாக மாற உள்ளது.. இது சென்னைக்கு அருகே தற்போது மேற்கு நோக்கி நகர்கிறது..

    புதுச்சேரி

    புதுச்சேரி

    ஆனால் அப்படி நகரும்போது 5 கி,மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.. இப்போது சென்னைக்கு தென்கிழக்கே 435 கி.மீ. நிலைகொண்டுள்ளது. புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 410 தொலைமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு, சற்று தென்கிழக்கே 400 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

     கரையை கடக்கும்

    கரையை கடக்கும்

    இனி மேற்கு நோக்கி நகரும். ஒரு பெண்டு அதாவது வளைவு ஏற்பட்டு புதுச்சேரி பக்கம் நகரும் என்று அரசு எதிர்பார்த்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. மாமல்லபுரம் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரி அருகே கரை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 11.30-க்கு நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது வானிலை ஆய்வு மையத்தினால், ஆனால், நம்முடைய ஆய்வின்படி, நேராகவே டர்ன் இல்லாமலேயே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     குழப்பம் வேணாம்

    குழப்பம் வேணாம்

    அரசு சொன்ன கருத்துக்கு நாம் எப்போதுமே எதிர்கருத்து சொல்ல கூடாது.. ஒரு இடத்தில் கரை கடக்கும் என்று அவர்கள் சொல்லி இருப்பார்கள்.. நாம் ஒன்று சொல்லி இருப்போம்.. இதனால் மக்கள் குழம்பிவிடுவார்கள்.. அதனால், நாகப்பட்டினம் முதல் மாமல்லவரை என சேர்த்திருந்தால்,பிரச்சனை இருக்காது. நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று என் கணிப்பு உள்ளது.

     பயப்படாதீங்க

    பயப்படாதீங்க

    ஒருவேளை நாகப்பட்டினத்தில் புயல் கரையை கடக்க போகிறது என்பதை நிரூபிக்கவும் முடியாது.. ஏன் என்றால், வேதாரண்யத்துக்கும், காரைக்காலுக்கும் ரொம்ப தூரம் இல்லை. இந்த புயல் பெரும்பாலும் மாமல்லபுரம் வரை செல்ல வாய்ப்பில்லை.. காரைக்காலுக்கு தெற்கு புறம்தான், அதாவது நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, அல்லது காரைக்கால் இங்குதான் புயல் கரையை கடக்கும். பயப்படாதீங்க.. ஏன்னா, இந்த புயலின் மொத்த 150 ஆரம், 350 விட்டம் ஆகும்..

     தென்னை மரம்

    தென்னை மரம்

    டெல்டா மாவட்டத்தில் காற்று அதிகமாக 125 வேக புயல் எல்லாம் தென்னை மரத்தை பாதிக்காது.. நாகப்பட்டினத்தின் வடக்கு பகுதி கீழ்வேளூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், அய்யம்பேட்டை, திருவாரூர் போன்றவர்கள் முன்னெச்சரிக்கை எடுத்தால் போதும்... அதுக்காக தென்னை மரத்தை வெட்ட வேண்டாம்.. நாகப்பட்டினத்துக்கும், மாமல்லபுரத்துக்கும் நடுவில்தான் கரையை கடக்க போகிறது.. சென்னைவாசிகள் பயப்பட வேண்டாம்.

     மழைப்பொழிவு

    மழைப்பொழிவு


    வடக்கு பகுதிக்கு மட்டும் காற்று இருக்கும். காற்றின் வேகம் கஜா புயலின் வேகத்துக்கு குறைவுதான்.. ஆனால் மழை அதிகமாக இருக்கும்.. வடக்கு பக்கம் மட்டுமே மழை கூடலாம்..இன்னைக்கு இரவைவிட நாளை பகல், நாளை இரவுதான் அதிகமான மழை இருக்கும்.. கரையை புயல் செயலிழக்கும்போதுதான், இந்த மழை அதிகமா பொழியும்..மதுரைக்கு வடக்கே, திண்டுக்கல் பகுதியில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். தொண்டியில் இருந்து தேனி வரை மழை இருக்கும். இதெல்லாம் காரைக்காலில் புயல் கடந்தால் மட்டுமே இது சாத்தியம்" என்றார்.

    English summary
    Nivar storm: Thagatur Selvakumar says about cyclone Nivar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X