சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா

நிவர் புயல் கடலூரின் கிழக்கு- தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மெல்ல நகர்ந்து இன்று புதுச்சேரி காரைக்கால் இடையே கரையை கடக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 410 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிவர் புயல் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று கரையை கடக்கும்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Nivar turns into a very severe Cyclone

நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. கடலூரின் கிழக்கு- தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக மாறி புதுச்சேரி காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால், பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இதேபோல் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்

அதி தீவிர புயலாக மாறி நிவர் புயல் கரையை கடக்கப் போகிறது. இதன் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயலை கண்காணிக்கவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடலூரிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தீவிர புயலாக மாறும் என்றும் அதற்குப் பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் அதற்கு பிறகு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து 25ஆம் தேதி இரவு மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புயல் கரையை கடப்பதால் இன்று தமிழகம், புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

English summary
Nivar is located 350 km southeast of Puducherry in the Bay of Bengal. 410 km east-southeast of Chennai. The Center for Meteorology predicts that the distant Nivar storm is moving at a speed of 5 km. The Met Office said that the storm will intensify in the next 6 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X