சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுடனான கூட்டணி உறுதியாகவில்லை.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.. எல் முருகன் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும் என பாஜக தலைவர் முருகன் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    BJP-AIADMK உடன் கூட்டணி உறுதியாகவில்லை- L Murugan பொளேர் | Oneindia Tamil

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக சார்பில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கியது.

    பல்வேறு நபர்கள் இந்த யாத்திரையை நடத்தக் கூடாது. இந்த யாத்திரை நடந்தால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் என்று கூறினர். மக்களின் வரவேற்போடு இந்த யாத்திரை நடைபெற்றது.

    3 நாட்கள்

    3 நாட்கள்

    அறுபடைவீடுகளில் 2 படை வீடுகளுக்கு நாங்கள் சென்று இருந்தோம். தமிழகத்தில் ஏற்பட்ட புயலின் காரணமாக யாத்திரை நடைபெறாமல் உள்ளது. இருப்பினும் அடுத்த 3 நாட்களில் 4 படை வீடுகளுக்கு செல்ல உள்ளளோம். டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் யாத்திரை நிறைவு பெறுகிறது.

    கருத்தரங்கள்

    கருத்தரங்கள்

    இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ள உள்ளார். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்த சட்டத்தை பாஜக கொண்டு வந்து உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பல்வேறு கருத்தரங்கங்கள் பாஜக சார்பாக நடைபெற்றது.

    விழிப்புணர்வு கூட்டம்

    விழிப்புணர்வு கூட்டம்

    தற்போது மீண்டும் இதனை வைத்து திமுக அரசியல் செய்ய நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள விவாசாயிகள் அனைத்தும் அறிந்தவர்கள். பாஜக சார்பாக டிசம்பர் 8 ஆம் தேதி முதல் விழிப்புணர்வு கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெறும். தற்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

     அர்ஜுன்மூர்த்தி

    அர்ஜுன்மூர்த்தி

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். அந்த வகையில் அவர் கட்சி குறித்து மத்தியில் உள்ள பாஜக முடிவெடுக்கும். பாஜகவில் இருந்து விலகி ரஜினியின் கட்சியில் அர்ஜுன்மூர்த்தி இணைந்து உள்ளார். அவர் திமுகவில் இருந்து விலகி குறைந்த காலத்திற்கு முன்னதாகவே பாஜகவில் இணைந்தார்.

    பாஜக தனி நபர் கட்சி அல்ல

    பாஜக தனி நபர் கட்சி அல்ல

    தற்போது ரஜினி கட்சிக்கு சென்றுள்ளார். பாஜக என்றும் தனி நபர் சார்ந்த கட்சி இல்லை. அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. அதுகுறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

    English summary
    TN BJP President L Murugan says that BJP alliance with AIADMK will be finalised by National BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X