சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக + பாஜக.. இதையேதான் அந்த டெய்லரும் சொன்னாரு... அப்ப தம்பிதுரை, இப்ப பொன்னையன்!

பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி கிடையாது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் திமுக-காங்கிரஸ் உறுதியாகி விட்ட ஒன்றாக உள்ளது. அதேபோல அதிமுகவும்-பாஜகவும் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இதற்கு மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். இவர் சொல்வதைப் பார்த்தால் பாஜக பக்கம் அதிமுக திரும்பாது என்று உணர முடிகிறது. மாறாக வேறு மாதிரியான கூட்டணிக்கு அது முயலக் கூடும்.

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

முன்னதாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று திட்டவட்டமாக பேட்டி அளித்திருந்தார் தம்பிதுரை. அன்றைய தினமே அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரையின் கருத்து அவரது சொந்த கருத்து, அதிமுகவின் கருத்து இல்லை என்று சொன்னதும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கூட்டணி கிடையாது

கூட்டணி கிடையாது

இப்போதுவரை அதிமுக-பாஜக இரு தரப்பிலும் கூட்டணி இல்லை என்றும், கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக சொல்லவில்லை. இந்த நிலையில், அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

கெடுதல் அதிகம்

கெடுதல் அதிகம்

இது சம்பந்தமாக அவர் சொல்லும்போது, "5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த பாஜக இப்போது கிடையாது. இந்த 5 வருடங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட கெடுதல் செய்ததுதான் அதிகம். அப்படி இருக்கும்போது, அவர்களுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது. அப்படியே கூட்டணி வைத்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.

பாமக, தேமுதிக

பாமக, தேமுதிக

இதே கருத்தைதான் நேற்று முன்தினம் தம்பிதுரையும் சொல்லி இருந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் இப்படி கருத்தை சொல்லி வருவது அதிமுகவுக்குள் சலசலப்பையும், பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இப்படி ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது, அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லையாம். மாறாக பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுமாம்.

மறைமுக கூட்டணி

மறைமுக கூட்டணி

இதிலும் ஒரு உள்குத்து இருப்பதாக பேசப்படுகிறது. அதாவது அதிமுக, பாஜக கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் படு மோசமான ரிசல்ட்டே கிடைக்கும். திமுகவின் வெற்றி மிக மிக சுலபமாகி விடும். மாறாக, அதிமுக, பாமக, தேமுதிக என போட்டியிட்டால் ஓரளவுக்கு திமுகவுக்கு போக வேண்டிய வாக்குகளை ஓரளவுக்குத் தடுக்க முடியும் என்பதால் பாஜகவே கூட கூட்டணி அமைக்க விரும்பாமல் மறைமுகக் கூட்டணிக்கு திட்டமிட்டு வருவதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது.

அரசியலாச்சே.. எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
AIADMK Spokesperson Ponnaiyan said that there is no alliance with the BJP in MP Electiion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X