சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு பிள்ளைகளுடன் வந்து கடும் அவஸ்தைபடும் பெற்றோர்கள்.. சென்னை பரிதாபங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நீட் தேர்வுக்காக பிள்ளைகளோடு வந்த பெற்றோர், தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி தவித்தனர்.

நாடு முழுவதும் மருத்து படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடந்து முடிந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது.

no basic facilities in neet exam center for parents in Chennai

மருத்துவர் ஆகும் கனவுடன் நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவ மாணவிகள் சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து, அவரவர் தேர்வு மையங்களுக்கு இன்று காலையிலேயே வந்து காத்துகிடந்தனர்.

சென்னையில் 31 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 12.30 மணி அளவில் இருந்தே கடும் சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை 6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை

இந்நிலையில் மைலாப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் பிள்ளைகளுடன் வந்த பெற்றோருக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்கப்படாததால் காத்திருக்கும் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மைலாப்பூரில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதுமே பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்காக மாணவர்களுடன் வந்த பெற்றோர்களும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

English summary
neety exam 2019 : no basic facilities in neet exam center for parents in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X