சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை.. வதந்தியை நம்பாதீர்- அமைச்சர் சிவசங்கர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன.

அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகிவிட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு அட்டவணை ஏதும் தயாராகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு மாநிலங்கள்

இரு மாநிலங்கள்

இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளில் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அவ்வாறு தான் பர்மிட் வழங்கப்படும்.

கேரளா- ஆந்திரா

கேரளா- ஆந்திரா

கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில் அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்ந்த பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை தவறாக புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகிவிட்டது என தவறான செய்தி பரப்பப்படுகிறது.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி சூறையாடப்பட்டு போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருந்ததாலும் தமிழக முதல்வர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சாதாரண பேருந்துகள்

சாதாரண பேருந்துகள்

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில் 112 கோடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

 தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

அதற்கான நிதியை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இது போன்று ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் கட்டண உயர்வு அட்டவணை தயாராகிவிட்டது என தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Minister Sivasankar says that there is no price hike on Government bus fare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X