சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை.. சர்ட்டிபிகேட் பெற்ற சினேகா.. குவிகிறது பாராட்டு

"இவர் சாதி, மதம் இல்லாதவர்" என்ற சான்றிதழை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாதி, மதம் அற்றவர் என அரசின் சான்றிதழ் பெற்ற முதல் நபர்- வீடியோ

    சென்னை: இப்படிக்கூட சர்ட்டிபிகேட் வாங்கலாம் என்று நிரூபித்துள்ளார் வேலூர் மாவட்ட பெண் ஒருவர்!

    திருப்பத்தூரை சேர்ந்த தம்பதி பார்த்திபராஜா-சினேகா. இவர்களின் திருமணம், சென்ற ஆண்டு சடங்கு, தாலி இன்றிதான் நடந்திருக்கிறது.

    சினேகா ஒரு வழக்கறிஞர். பல ஆண்டுகளாகவே தான் எந்த சாதியையும், மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்ற சான்றிதழை பெற வேண்டும் என்பதற்காக நீண்ட நாள் முயன்று, அதற்காக மனு கொடுத்து வந்துள்ளார்.

    வட்டாட்சியர்

    வட்டாட்சியர்

    தற்போது, சினேகாவுக்கு, திருப்பத்தூர் வட்டாட்சியர், "இவர் எந்த சாதி மற்றும் மதம் அற்றவர்" என்ற சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    இதன்மூலம், இந்தியாவிலேயே ‘சாதி, மதம் அற்றவர்' என அரசின் சான்றிதழ் பெற்ற முதல் பெருமையை பெற்றவர் ஆகிறார் சிநேகா. இதனால் சினேகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    மும்தாஜ், ஜெனிபர்

    மும்தாஜ், ஜெனிபர்

    இதுகுறித்து சினேகா சொல்லும்போது, "நான் ஸ்கூலில் இருந்து காலேஜ் வரை 'ஜாதி, மதம் இல்லாதவள் என்று சொல்லியே படித்தேன். இதுவரைக்கும் என் சான்றிதழ்களில் சாதி, மதம் பற்றி குறிப்பிட்டதே இல்லை. இப்படித்தான் என் தங்கைகள் மும்தாஜ், ஜெனிபர் இருவருக்கும் சாதி மதம் குறிப்பிடவில்லை" என்கிறார்.

    குவியும் பாராட்டு

    குவியும் பாராட்டு

    ஆனால் இன்னொரு பக்கம், அரசு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களில் சாதி, மதம், குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளபோது, இப்படி ஒரு சான்றிதழை வட்டாட்சியர் அளிக்க அதிகாரம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. இருந்தாலும், "எனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை" என்பதை வலியுறுத்த சினேகா எடுத்த இந்த முயற்சி பாராட்டுக்குரியதே.

    English summary
    Thirupathur Advocate Sneha got No Caste No Religion Govt., Certificate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X