சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவ்வளவுதான், இதுக்கு மேல முடியாது.. தேமுதிகவுக்கு கேட்டை இழுத்து மூடியது திமுக!

திமுகவில் தேமுதிக இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கேட்டதை தர முடியாத காரணத்தினால், தேமுதிகவுடனான கூட்டணி கதவை படார் என இழுத்துமூடி விட்டதாம் திமுக தரப்பு!

தமிழகத்தில் வரப்போகிற தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் நிறைய கட்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பெரும்பாலான கட்சிகள் ஓரளவு கூட்டணிகளை முடிவு செய்து அறிவிப்புகளையும் வெளியிட்ட நிலையில், ஒருசில கட்சிகள் மட்டும் இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் உள்ளது.

இதில் முக்கியமானது தேமுதிக ஆகும். விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்ததில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடானது. குறிப்பாக விஜயகாந்த்தின் சாலிகிராம் வீட்டுக்கு கட்சி தலைவர்கள் திடீரென படையெடுத்து சென்ற அந்த 3 நாட்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.

 தேமுதிக கறார்

தேமுதிக கறார்

ஆனால் தங்களது தற்போதைய பலத்தைப் புரிந்து கொள்ளாமல், பாமகவுக்கு தந்தது போலவே தங்களுக்கும் அதே அளவில் சீட் வேண்டும் என்று தேமுதிக கறார் காட்டவும் கூட்டணி இழுபறி நீடிக்க ஆரம்பித்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால் யாருக்குமே தேமுதிக கேட்ட சீட் எண்ணிக்கையை தர இஷ்டமே இல்லை.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இருந்தாலும் கூட்டணி பலத்தை காட்ட பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. இதில் அதிமுக ஆரம்பத்தில் காட்டிய ஆர்வத்தை பிறகு தீவிரமாக காட்டவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தேமுதிகவோ எல்லோருடனுமே ரவுண்டு கட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்படி திமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிகவின் நிபந்தனைகளை திமுக ஏற்கவில்லை. காரணம் ஏற்கக் கூடிய அளவுக்கு தேமுதிக பேசவில்லை. ஓவர் பேச்சாம்.

 முக்கிய சமாச்சாரம்

முக்கிய சமாச்சாரம்

கடைசியாக 4 சீட் வேண்டுமானால் தர திமுக ஒப்புக் கொண்டதாம். ஆனால் தேமுதிகவோ சீட் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சியை நடத்தக்கூட முடியாத நிலை உள்ளதால், "முக்கிய சமாச்சாரத்தை" கண்டிப்பாக வேண்டும் கேட்டுள்ளது. அதிலும் ஏகமாக எதிர்பார்த்ததாக சொல்கிறார்கள். ஆனால் திமுகவோ வேண்டுமானால் சீட் மட்டும் வாங்கி கொள்ளுங்கள், அது மட்டும்தான் தங்களால் தர முடியும் என்று சொல்லி கூட்டணி கதவை படார் என்று சாத்திவிட்டதாம். திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாம்.

 விசிக, மதிமுக

விசிக, மதிமுக

இதையடுத்து தேமுதிக சீட்டுடன் கூடிய சலுகை வேறு கட்சியில் எங்காவது கிடைக்குமா என்றே கணக்கு போட்டு வருகிறதாம். மறுபக்கம், திமுக கூட்டணியில் இதுவரை முடிவாக கட்சிகள் விசிக மற்றும் மதிமுக மட்டும்தான். இரு கட்சிகளுமே 2 சீட்கள் வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகிறார்கள்.

 விரைவில் முடிவு

விரைவில் முடிவு

ஆனால் இரண்டு கட்சிக்கும் தலா ஒரு சீட் தருவதாகவும், வேண்டுமானால் ராஜ்ய சபா சீட் ஒன்றினை கண்டிப்பாக தருவதாகவும் திமுக வாக்கு தந்துள்ளதாம். அனேகமாக இந்த இரு கட்சிகளின் கூட்டணி சமாச்சாரம் நாளை முடிவு செய்யப்பட்டுவிடும் என்றும், நாளை மறுநாள் திமுக கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

English summary
The coalition between DMK and MDMK is said to have no possibility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X