India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

23வது நாளாக.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை.. சென்னையில் விலை நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க 23வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

No Change in Petrol, diesel price today for consecutive 23rd day in India

நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. பல மாநிலங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் விலைகள் உயர்ந்தன.

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 3 வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

இலங்கை: முன் பதிவு செய்தால் கோட்டா முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை- அமலுக்கு வருகிறது! இலங்கை: முன் பதிவு செய்தால் கோட்டா முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை- அமலுக்கு வருகிறது!

அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 78.11 என்ற மோசமான நிலையை அடைந்தாலும் கூட பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாடு முழுக்க 23வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

English summary
'No Change in Petrol, diesel price today for consecutive 23rd day in India: What is the rate today? நாடு முழுக்க 23வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X