சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்!

அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில் குக்கர் சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற முடியாமல் போய் இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில் குக்கர் சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற முடியாமல் போய் இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எந்த பக்கம் சென்றாலும் சறுக்கல் என்ற நிலையில்தான் தற்போது டிடிவி தினகரனின் நிலை சென்று கொண்டு இருக்கிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தோல்வி, திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு, செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தது என்று வரிசையாக நிறைய பிரச்சனைகளை டிடிவி தினகரன் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளுடன் சேர்ந்து குக்கரும் டிடிவி தினகரனுக்கு எதிராக விசில் அடிக்க தொடங்கி இருக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

என்ன ஆனது

என்ன ஆனது

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது. குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் வேறு சின்னம் வேண்டுமானால் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பெரிய சறுக்கல்

பெரிய சறுக்கல்

குக்கர் சின்னம் செண்டிமெண்டாக டிடிவி தினகரனுக்கு ராசியான சின்னம் ஆகும். பல எதிர்ப்புகளை மீறி டிடிவி தினகரன் சுயேட்சையாக ஆர்கே நகரில் வென்று கெத்து காட்ட இந்த குக்கர் சின்னம்தான் உதவியது. அதில் இருந்தே டிடிவி தினகரன் என்றால் குக்கர் சின்னம் என்று மக்களுக்கு பதிவாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால் தற்போது அந்த சின்னத்தை நிரந்தரமாக பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

ஆர்கே நகர் தேர்தலுக்கு பின் டிடிவி தினகரன் நடத்திய கூட்டங்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடந்த அனைத்து கூட்டங்களிலும் இந்த குக்கர் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றால் அது குக்கர்தான் என்று பல மக்கள் மத்தியில் பதிவாகி இருக்கிறது. ஆனால் தற்போது அது மொத்தமும் வீணாய் போகும் நிலைக்கு சென்று உள்ளது.

வைரல் செய்தனர்

வைரல் செய்தனர்

அதேபோல் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்த பல வித்தியாசமான முயற்சிகளை அமமுக செய்தது என்றுதான் கூற வேண்டும். போஸ்டர் ஒட்டுவது, குக்கர் வடிவத்தில் பெரிய கட் அவுட் வைப்பது, சமயங்களில் மக்களுக்கு குக்கர் கொடுப்பது என்று பெரிய அளவில் இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டது. இப்போது அத்தனை விளம்பரங்களும் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

புதிய சின்னம்

புதிய சின்னம்

இனி 21 தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் அமமுக புதிய சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். அப்படி போட்டியிடும் பட்சத்தில் அமமுக தனது புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பெரும் சிரமமாக இருக்கும். இதனால் மீண்டும் புதிய சின்னத்தை பிரபலப்படுத்தும் நிலைக்கு அமமுக சென்று இருக்கிறது.

English summary
No Cooker: It would be the major setback for TTV Dinakaran and AMMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X