சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக.17 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம்... பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கவில்லை - செங்கோட்டையன்

கொரோனா சூழல் காரணமாக தமிழ்நாட்டில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் 1,6,9ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் போடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டு மதிப்பெண்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

No decision taken yet on reopening of Tamil Nadu schools: education minister

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பு எப்போது என்று தெரியவில்லை. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பல பள்ளிகள் கொரோனா தனிமை முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்று கூறினார்.

கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க - பிரதமரிடம் கேட்ட முதல்வர் கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க - பிரதமரிடம் கேட்ட முதல்வர்

ஆகஸ்ட் 17 முதல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று கூறினார். ஆகஸ்ட் 24 முதல் 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று கூறிய அமைச்சர் தனி மனித இடைவெளியை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா சூழ்நிலை முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
State school education minister K A Sengottaiyan on Tuesday said that no decision taken yet on reopening of schools but school admission begins from august 17th 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X