சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரும் பாடம் கற்றதாக தெரியவில்லை.. மாஸ்க்கும் இல்லை.. சமூக இடைவெளியும் இல்லை.. ஷாக் கோயம்பேடு!

Google Oneindia Tamil News

சென்னை: மே மாதத்தில் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆக மாறிய சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 5.8 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் இருந்து பலர் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கோயம்பேடு சந்தையில் ஏப்ரல் மாதம் மூடப்படுவதற்கு முன்னர் 3,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் வந்து சென்ற பலருக்கும் தொற்று பரவியது. இந்த சந்தையில் இருந்துதான் தமிழகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய அளவில் பரவியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மீண்டும் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட காய்கறி சந்தை மட்டும் திறக்கப்பட்டுள்ளது, பூ மற்றும் பழ மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் . ஆனால் அங்கு பலரும் விதிமுறைகளை கடைபிடிப்பதாக தெரியவில்லை.

அக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு அக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சமூக இடைவெளி இல்லை

சமூக இடைவெளி இல்லை

கோயம்பேடு காய்கறி சந்தையில் பல மக்கள் (பெரும்பாலும் வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள்) முககவசம் இல்லாமல் காணப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறிவிட்டனர். கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை ஏற்றும் வேலாயுதம், கடைகளுக்கும் லாரிகளுக்கும் இடையே மாய்ந்து மாய்ந்து வேலை செய்து வந்தார். அவரும் முககவசம் அணியாத நபர்களில் ஒருவர்.

கொரோனாவுக்கு பயம் இல்லை

கொரோனாவுக்கு பயம் இல்லை

அங்கிருந்து ஒரு சில கடைகளுக்கு அடுத்து சென்று பார்த்தால், வாழை மொத்த விற்பனை கடையில் பணியாற்றும் வேலை செய்கிறவர் கருணாகரன் என்ற தொழிலாளியும் முககவசம் அணியவில்லை. சமூக தூரத்தையும் கடைப்பிடிக்கவில்லை. அவரது நண்பர்களும் ஒன்றாக உட்கார்ந்து அரட்டையடிக்கும்போதும் முககவசத்தை பற்றி சுத்தமாக கவலைப்படவில்லை. இது தொடர்பாக கருணாகரன் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில். "நாங்கள் கொரோனாவுக்கு பயப்படவில்லை. நாங்கள் பயந்தால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? நான்கு மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் இருந்தோம். எங்களுக்கு அது மிகவும் கடினமான நேரம் என்றார்.

உடல் உழைப்பு தொழிலாளர்கள்

உடல் உழைப்பு தொழிலாளர்கள்

ஒட்டுமொத்தமாக, கோயம்பேட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள 2,000 கடைகளில் ஏறத்தாழ கால்வாசி பேர்., அதாவது சுமார் 30 சதவீதம் பேர் கொரோனா விதிமுறையை கடைபிடிக்கவில்லை. இது தொடர்பாக ஒரு கடையின் மேனேஜர் கூறுகையில். "இது ஒரு உடல் உழைப்பு மிகுந்த இடம். மக்கள் நிறைய வியர்வை சிந்தி உழைக்கிறார்கள்... அவர்கள் பெரும்பாலும் முகமூடியை அகற்றி, முகத்தைத் துடைத்து, மீண்டும் அணிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு புதிய காற்றைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்களால் உதவ முடியாது," என்றார்.

 அபராதமும் விதிப்பு

அபராதமும் விதிப்பு

கடுமையான லாக்டவுன் பொருளாதாரம் வணிகத்தை பாதித்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த பின்னரே சென்னை மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது சென்னையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தினமும் தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்த போதிலும் மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.

சூப்பர் ஸ்ப்ரெட் ஆகும்

சூப்பர் ஸ்ப்ரெட் ஆகும்

பல ஆயிரம் பேர் வருமானத்தை இழந்து ஐந்து மாதங்களாக தவித்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்க அரசு கோயம்பேடு சந்தையை திறந்துவிட்டுள்ளத. ஆனால்
முன்னெச்சரிக்கைகள் இல்லாததால் கோயம்பேடு சந்தை மீண்டும் கோவிட் சூப்பர் ஸ்ப்ரெடராக மாறக்கூடும் என்று பலர் கவலைப்படுகிறார்கள், எனவே மக்கள் பொறுப்புடன் செயல்படுவது மட்டுமே ஒரே வழி.

English summary
The Koyambedu wholesale vegetable market in Chennai, which was labelled a coronavirus hotspot in May, reopened today, but many seem not to have learned lessons from pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X