சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய.. சென்னை விமான நிலையத்தில்.. போதிய வசதிகள் இல்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி

    சென்னை: கொரோனா வைரஸ் அறிகுறிகளை சோதனை செய்வது குறித்து சென்னை விமான நிலையத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அங்கு நோய் தொற்றுடன் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் கூடிய தனி கட்டடங்கள் ஏதும் இல்லை என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் சோதனைக்குள்படுத்தப்படுகிறார்கள். ஒரு வேளை அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றோ அதற்கான அறிகுறிகளோ தென்பட்டால் அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் தனியாக செயல்படும் நோய் தொற்று மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த வசதி பெரும்பாலான விமான நிலையங்களில் உள்ளது. எனினும் சென்னை விமான நிலையத்தில் அது போன்ற ஒரு வசதி இல்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு எபோலா வைரஸ் நோய் ஆப்பிரிக்காவிலிருந்து பரவியது.

    சீன அதிபர் சொன்னது போல நடந்தது.. ஒரே நாளில் 25 பேர் பலி.. 5300 பேருக்கு பாதிப்பு.. வேகமெடுத்த கொரோனாசீன அதிபர் சொன்னது போல நடந்தது.. ஒரே நாளில் 25 பேர் பலி.. 5300 பேருக்கு பாதிப்பு.. வேகமெடுத்த கொரோனா

    விமான நிலையம்

    விமான நிலையம்

    அந்த நேரத்திலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டனர். காற்றின் மூலம் இந்த நோய் பரவுவதால் விமான நிலையங்களில் நோய் அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை வெளியே அனுப்பாமல் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    பணிகள் கிடப்பில்

    பணிகள் கிடப்பில்

    இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வெளியே சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான நிலைய சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் இடம் அடையாளம் காண்பிக்கப்பட்டது. ஆனால் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

    தனிமை

    தனிமை

    இந்த நிலையில் தற்போது சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனைய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் விமானப் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் எப்போதுமே விமான நிலையத்திலிருந்து தூரத்திலேயே இருக்க வேண்டும். எல்லாரும் சுவாசிக்கும்படியான காற்று வசதியோ கழிப்பறை வசதியோ இருக்கக் கூடாது என்பதுதான் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் திட்டம் என்றார்.

    கட்டுமான பணிகள் முடக்கம் ஏன்

    கட்டுமான பணிகள் முடக்கம் ஏன்

    இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் விமான நிலைய சுகாதார நிறுவனம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் வருகிறது. ஆனால் இந்திய விமான நிலைய ஆணையமோ விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே யார் கட்டுமான பணிகளை தொடங்குவது என்பதில் புரிதல் இல்லாத நிலை உள்ளது.

    முனையத்தில்

    முனையத்தில்

    இந்த கட்டடம் விமான நிலையத்தில் பயணிகளுக்கானது என்றாலும்கூட அதை விமான நிலைய சுகாதார நிறுவனம் தான் நிர்வகிக்கிறது. இது வரை சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு வேளை யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் பொதுவான குளிர்சாதன வசதி என்பதால் அவரை நீண்ட நேரம் முனையத்தில் வைத்திருக்க முடியாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    No facility at Chennai Airport to check for Corona virus as it lacks well equipped screening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X