சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலநடுக்கத்தால் சென்னைக்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் நில அதிர்வு... வெதர்மேன் என்ன சொல்கிறார்?- வீடியோ

    சென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் தி நகர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகாலை 1.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    No harm for Chennai due to Earth Quake says Tamil Nadu Weatherman

    இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் ஆக பதிவானது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் தொடர்பாக தற்போது நிறைய வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

    தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்து இருக்கிறார். தமிழ்நாடு வெதர்மேன் இதுகுறித்து செய்திருக்கும் பேஸ்புக் போஸ்ட்டில், இந்த நிலநடுக்கம் சென்னைக்கு அருகில் ஏற்படவில்லை.

    சென்னையில் இருந்து மிக அதிக தொலைவில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, யாரும் கவலைப்பட வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம், வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    இதே இடத்தில் 1999ல் ஒரே ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது, என்று அவர் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் சென்னையில் இருக்கும் மக்கள் பயப்படாமல் இருக்கும்படி அவர் கூறி இருக்கிறார்.

    English summary
    No harm for Chennai due to Earth Quake, Don't believe in rumors says Tamil Nadu Weatherman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X