சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Understand? புரிஞ்சுதா?.. ஒரே ட்வீட்டில் கூட்டணிக்கு ராமதாஸ் போட்ட முழுக்கு.. அதிமுகவிற்கு பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் வித்தியாசமான ட்வீட் ஒன்றை செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Recommended Video

    AIADMK உடன் PMK கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? | Oneindia Tamil

    அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்தே அது தொடர்பாக இடியாப்ப சிக்கல் போல வரிசையாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் இருந்து வெளியேறி சில நிமிடங்களிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்தவில்லை. நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாத, சரியான தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்ன பயன் என்று ராமதாஸ் கடுமையான விமர்சனம் வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

     எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவிக்கு சிக்கல்?.. ஹைகோர்ட்டில் மனு தாக்கல்.. அதிமுகவில் பரபரப்பு..! எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவிக்கு சிக்கல்?.. ஹைகோர்ட்டில் மனு தாக்கல்.. அதிமுகவில் பரபரப்பு..!

    பாலு பாமக

    பாலு பாமக

    ஆனால் பாமக செய்தி தொடர்பாளர் பாலுவோ, நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுகவிற்கும் எங்களுக்கும் இடையில் மோதல் நிலவுவது போல தோற்றம் இருக்கிறது. அது உண்மை கிடையாது என்று விளக்கம் அளித்தார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்த அதே நாளில் பாலு இப்படி பேசியது பாமகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு பாமக அதிமுக

    செங்கல்பட்டு பாமக அதிமுக

    இருக்கிற குழப்பம் போதாது என்று இரண்டு நாட்களாக இன்னொரு செய்தியும் வெளியாகி வந்தது. அதன்படி செங்கல்பட்டில் மட்டும் பாமக அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதாவது உள்ளூர் அளவில் லோக்கல் கூட்டணியை வைத்துக்கொள்ள பாமக அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வந்தது. வேலூரிலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று கூறப்பட்டது.

    அதிமுக பாமக கூட்டணி

    அதிமுக பாமக கூட்டணி

    பாமகவின் நிலைப்பாடு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது. செங்கல்பட்டில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப இடங்களுக்கான பட்டியலை அதிமுகவிடம் பாமக வழங்கியிருப்பதாக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரும் இணையத்தில் ட்வீட்களை செய்து வந்தனர்.

    உள்ளூர் கூட்டணி

    உள்ளூர் கூட்டணி

    இதனால் உள்ளூர் அளவில் பாமக அதிமுகவோடு செங்கல்பட்டு, வேலூரில் மட்டும் கூட்டணி வைத்து ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமோ என்ற கேள்வி எழுந்தது. அதாவது உள்ளூர் அளவில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் தேர்தலை ஒன்றாக சந்திப்பது. மற்ற இடங்களில் தனியாக நிற்பது என்று ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது பாமகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    கூட்டணி ஆலோசனை

    கூட்டணி ஆலோசனை

    இந்த நிலையில்தான் இது போன்ற லோக்கல் கூட்டணி ஆலோசனைகளுக்கு மொத்தமாக ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். ராமதாஸ் செய்துள்ள ட்வீட்டில் லோக்கலும் கிடையாது.. லோக்கல் அண்டர்ஸ்டான்டிங்கும் கிடையாது. புரிஞ்சுதா? என்று கேட்டு ராம்தாஸ் பேப்பரில் எழுதி அதை ட்வீட் செய்துள்ளார். அதாவது லோக்கல் அளவில் அதிமுக பாமக இடையே அண்டர்ஸ்டான்டிங் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

    முழுக்கு போடும்

    முழுக்கு போடும்

    அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக முழுக்கு போடும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த ட்வீட்டை செய்துள்ளார். பாமக நிர்வாகிகள் சிலரும் செங்கல்பட்டில் உள்ளூர் அளவில் கூட்டணி வைக்க தயாராக இருந்ததாகவும், பேச்சுவார்த்தை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த ட்வீட் மூலம் பாமக நிர்வாகிகள் யாரும் லோக்கல் அளவில் அதிமுகவோடு எந்த ஒப்பந்தமும் வைத்துக்கொள்ள கூடாது ராமதாஸ் இந்த ட்வீட் மூலம் மறைமுகமாக எச்சரித்து உள்ளார்.

    English summary
    No local understanding with AIADMK in local body elections says PMK Founder Ramadoss in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X