சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மூடப்படும் ஹோட்டல்கள்.. அய்யோ சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்? பீதியில் இளைஞர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் மூடப்படும் உணவகங்கள், பீதியில் இளைஞர்கள்!

    சென்னை: சென்னையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஹோட்டல்கள் தொடர்ந்து மூடப்படுவதால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஒன் இந்தியா தமிழ் செய்தித்தளம் தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகிறது. தண்ணீர் இன்றி தமிழக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது.

    சென்னையில் கோடை நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை என்பது வாடிக்கையான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!

    குடங்களுடன் அலையும் மக்கள்

    குடங்களுடன் அலையும் மக்கள்

    சென்னையின் எந்த பகுதிக்கு எப்போது சென்றாலும் தெருக்கு தெரு மக்கள் கைகளில் குடங்களுடன் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதேபோல் ஆண்களும் தங்களின் இருசக்கர வாகனங்களில் குடத்தை கட்டி தொங்கவிட்டப்படி செல்வதை காணமுடிகிறது.

    குதிரை கொம்பாகிவிட்டது

    குதிரை கொம்பாகிவிட்டது

    ஒரு குடும்பத்திற்கு சமைக்க, பாத்திரம் கழுவ என அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் கிடைப்பதே குதிரை கொம்பாகிவிட்டது. இந்நிலையில் ஹோட்டல்களின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    விலை கொடுத்து வாங்கும் நிலை

    விலை கொடுத்து வாங்கும் நிலை

    சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டுவரும் ஆனந்தா ஹோட்டலில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மதிய உணவை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். குடிநீர் முதல் பாத்திரங்களை கழுவுவது வரை அனைத்திற்கும் ஹோட்டல் நிர்வாகம் தண்ணீரை லாரிகளில் விலை கொடுத்தே வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஹோட்டலின் ஊழியர் நாராயணன் கூறியுள்ளார்.

    ஹோட்டல் ஊழியர் நாராயணன்

    ஹோட்டல் ஊழியர் நாராயணன்

    தற்போது தனியார் லாரிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றி மதிய சாப்பாடு தயாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் குடிநீருக்கு கூட காசு கொடுத்து தண்ணீர் கேன்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். தண்ணீர் பற்றாக்குறையால் கேரியர் சாப்பாட்டு முறையை நிறுத்தியிருப்பதாக கூறிய அவர் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இளைஞர் கருத்து

    இளைஞர் கருத்து

    இதனிடையே ஹோட்டலுக்கு சாப்பிட வந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் பிரச்சனையால் மதிய சாப்பாடு நிறுத்தப்படுவதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டால் சாப்பாட்டுக்கு சிரமம் ஏற்படும் என கூறியுள்ள அவர் அரசு உடனடியாக தலையிட்டு ஹோட்டல்களின் பிரச்சனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    பொதுமக்கள் கருத்து

    பொதுமக்கள் கருத்து

    இதேபோல் அப்பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலை பகுதி மக்களும் தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஒரு நாள் விட்டு ஒருநாள் லாரிகளில் வழங்கப்பட்ட தண்ணீர் தற்போது 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாக கூறினார். பொதுமக்கள் ஓரளவுக்கு சமாளித்தாலும் இந்த தண்ணீரை வைத்து உணவகங்கள் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Chennai water crisis: Chennai Ananda hotel has announced there will be no lunch due to water crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X