சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது - கமல்ஹாசன் கடிதம்

தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான். கடமை தவறினால் இங்கே காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்தவர்கள் தாமே வேறு சந்தை தேடி போய் விடுவர் என்பது கட்சியை துவக்கும் போதே எனக்கு தெரிந்ததே என்று கமல்ஹாச

Google Oneindia Tamil News

சென்னை: நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சாதனை என்பது சொல்லல்ல செயல். இந்த நேரத்திலும் என் தலைவன் இருக்கின்றான் அவன் எங்களை வழிநடத்தி தீருவான் என்று நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது என்று கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டார். சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை பறி கொடுத்தார் கமல்ஹாசன்.

திருநாவுக்கரசு தனக்கோடி வேல்முருகன் எனும் நான்..வந்தே மாதரம், பெரியார் வாழ்க... சட்டசபை 'கலகல' திருநாவுக்கரசு தனக்கோடி வேல்முருகன் எனும் நான்..வந்தே மாதரம், பெரியார் வாழ்க... சட்டசபை 'கலகல'

ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். மநீம கட்சியில் இருந்து மகேந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் விலகினர். இந்த நிலையில் தேர்தல் தோல்வி, மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியது உள்பட பல விசயங்கள் குறித்து தனது கட்சியினரிடம் மனம் திறந்து தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மையம்

மக்கள் நீதி மையம்

என் குரல் எதுவென்று தெரிந்து வைத்திருக்கும் இனிய உறவுகளுக்கு நன்றி. மக்கள் நீதி மையம் அமைக்கப்பட்டது அரசியலை வியாபாரமாக இன்றைய அரசியலில் இருப்பவர்களுக்கு இன்னொரு கட்சியாக அல்ல. சீரழிந்து உள்ள அரசியலில் ஒதுக்கப்பட்டு புக முடியாமல் இருக்கும் வர்க்கங்கள், இளைஞர்கள், மகளிருக்காக துவக்கப்பட்டது. எனவே அரசியலை வியாபாரமாக பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள் மட்டுமே இக்கட்சியில் தங்கி செழிக்க முடியும்.

சொந்த செலவு

சொந்த செலவு

மக்கள் நீதி மையத்தில் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேர எனினும் அந்தப் பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உறுதி. எப்படி? நான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். என் சொந்த சம்பாத்தியத்தில் செலவு செய்த அந்தத் தொகை எனக்கு பெரிது. ஆனால் நம்முடன் களம் கண்ட போட்டியாளர்கள் செலவை ஏணி வைத்தால்கூட அது எட்டாது. அப்படி இருந்தும் மும்முனை போட்டி இருந்த தொகுதியில் 33 விழுக்காடு மக்கள் நம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள்.

மக்கள் நம் பக்கம்

மக்கள் நம் பக்கம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மையம் 33 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும். இன்னும் இரண்டாயிரம் பேர் வாக்களித்திருந்தால் சரித்திரம் சற்றே மாறி இருக்கும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அந்த 33 விழுக்காடு மக்கள் நம் பக்கம் இருந்தார்கள். தொடர்ந்து இருப்பார்கள். இது போன்று எல்லா தொகுதிகளும் ஆக முடியும்.

நம்மவர் கூட்டம்

நம்மவர் கூட்டம்

நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சாதனை என்பது சொல்லல்ல செயல். இந்த நேரத்திலும் என் தலைவன் இருக்கின்றான் அவன் எங்களை வழிநடத்தி தீருவான் என்று நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது. தற்போது விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த விமர்சனங்களில் எத்தனை விழுக்காடு நிஜம் இருக்கிறது என்று அறிந்து பொய்களை கலைந்து அயர்வின்றி பயணத்தை தொடர்வோம்.

கடமை தவறினால்

கடமை தவறினால்

கள ஆய்வுகளைச் செய்து தொண்டர்கள் செய்திகளை எனக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அந்த ஆய்வு இல்லாமல் களை எடுப்பதும் உசிதமல்ல. ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன்.. தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்கள் என காத்திருப்பவன் நானல்ல. தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான். கடமை தவறினால் இங்கே காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்தவர்கள் தாமே வேறு சந்தை தேடி போய் விடுவர் என்பது கட்சியை துவக்கும் போதே எனக்கு தெரிந்ததே.

இலை உதிர்தல்

இலை உதிர்தல்

தலைவன் குரலுக்கும் மாரீசன் குரலுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் என் சகோதர சகோதரிகள். விருட்சமாய் அதிவேகத்தில் வளரும் எந்த கட்சியிலும் இலை உதிர்தல் நடந்தவண்ணம் இருக்கும். வசந்த காலமும் அப்படித்தான். நம் கட்சியின் நோக்கம் இலக்கு ஆகியவற்றை சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க முடியாது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

எல்லா தொகுதிகளிலும் பொறுப்புகளுக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தும் அந்த பொருட்களுக்கு ஆள் போடாமல் இருந்தது விபத்தல்ல என்பது இப்போது வெளிச்சமாகிறது. பொள்ளாச்சியில் புதிய கட்சி அலுவலகம் தெரிந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தூத்துக்குடியிலும் புதிய கட்சி அலுவலகத்திற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்தி வந்தது அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நேரில் சந்திப்போம்

நேரில் சந்திப்போம்

மக்கள் நீதி மையத்தில் தங்கள் கட்சியை இணைத்துக் கொள்ள விரும்புவதாக சில இளம் கட்சிகள் முன்வந்துள்ளன. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மற்றுமொரு சான்று இது. உங்களையெல்லாம் நேரில் சந்திக்க துடிக்கிறேன். ஆனால் இப்போது பொது ஊரடங்கு இருப்பதால் அது சாத்தியம் அல்ல. எனவே மக்கள் சங்கடங்கள் குறையட்டும் ஓயட்டும் மீண்டும் நாம் சந்திப்போம் சிந்திப்போம்.

சிந்தனை முக்கியம்

சிந்தனை முக்கியம்

கலந்துரையாடவும் எதிர்கால பயணத்தை திட்டமிடுவோம். அதற்குள் உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது. கட்சிக்கு மகத்தானது. எனவே தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள். இன்றே நம் வசப்படுத்துவோம் நாளை நமதாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
We need to work harder. Achievement is not a word but an action. Kamal Haasan has written a letter to the volunteers saying that no maneuver can bring us down as long as there is a crowd of our people who believe that my leader is still there and he will lead us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X