சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் அந்த தேவை எழவில்லை.. ஸ்டாலின் உதவியை, நாசூக்காக தவிர்த்த எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: தற்போது 17,000 படுக்கைவசதிகளுடன் சிகிச்சை அளிக்க கூடிய அளவிற்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. எனவே, தற்போது அரசியல் கட்சிகள் தனியார்கள் வழங்கும் இடங்களை பயன்படுத்த இன்னும் தேவை எழவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    என்ன மனசு சார்... முதியவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் செய்த உதவி

    கொரோனா நிவாரணத்திற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 31.3.2020 வரை வழங்கப்பட்ட மொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாயாகும். நன்கொடையளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீது அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

    No need for using places of political parties for coronavirus treatment: Edappadi Palanisamy

    இந்தியாவிலேயே 1 ரூபாய்க்கு 1 இட்லி (அம்மா உணவகங்களில்) கொடுத்து தமிழ்நாடு முன்னுதாரணமான மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு உணவு வேண்டுமானாலும் அம்மா உணவகங்களில் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 4.5 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவு அருந்துகின்றனர்.

    எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் உணவு தயாரித்துக் கொள்ள அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் அம்மா உணவகங்கள் மூலம், எளிதாக மலிவான விலையில் உணவு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    மற்ற உணவகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் பெறுவோர்கள் மட்டும் பெற்றுக் கொள்ளலாம். மற்ற உணவகம் எங்கும் திறக்கப்படவில்லை. அதிக விலைக்கு உணவுகளை எப்படி விற்க முடியும்? அப்படி இருந்தால் தெரிவிக்கலாம்; தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இரு மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. ஆனாலும், ஒரு ஹேப்பி நியூஸ் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இரு மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. ஆனாலும், ஒரு ஹேப்பி நியூஸ்

    EMI செலுத்துவது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசும் மத்திய அரசும் தெளிவுபடுத்தியிருக்கிறது. நம் நிதித்துறை செயலரும் நேற்று விளக்கமளித்துள்ளார். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வலியுறுத்தப்படும்.

    டெல்லி Conference -ல் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 1331 பேரில் 515 நபர்கள் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நேற்று 45 பேருக்கு Positive முடிவு வந்திருக்கிறது. ஆகவே மீதமுள்ளவர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறியிருக்கிறோம். ஏனெனில் இதனால் அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள பலர் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும்.

    எனவே, அவர்கள் கொரோனாவின் தாக்கத்தை அறிந்து தாங்களாக முன்வந்து அரசிற்கு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலர் குணமாகி கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகும் சூழ்நிலை இருக்கிறது.

    ஈஷா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அறிகுறி இருந்தால் அவர்களையும் ஆய்விற்கு உட்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அறிகுறி இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது. தகவல் சொன்னால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மேலும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பட்டியலையும் எடுத்திருக்கிறோம். அவர்கள் வெளிநாட்டவர்களானாலும் சரி அல்லது தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களானாலும் சரி, அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    தற்போது 17,000 படுக்கைவசதிகளுடன் சிகிச்சை அளிக்க கூடிய அளவிற்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. எனவே, தற்போது அரசியல் கட்சிகள் தனியார்கள் வழங்கும் இடங்களை பயன்படுத்த இன்னும் தேவை எழவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது அதையும் நாங்கள் பயன்படுத்தி கொள்வோம்.

    நோய் பரவலை தடுப்பதற்காகத்தான் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எல்லாருமே இதில் பங்கு கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பால் தான் இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்; பரவுவதை தடுக்க முடியும். தனி ஒருவரால் அல்ல.

    அரசாங்கம் சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மதித்து மக்கள் நடக்க வேண்டும். நோய் பரவாமல் இருக்கத்தான் சட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவடைய உயிரும் அரசிற்கு மிக முக்கியம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.

    விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும், அறுவடை செய்யவோ, வேளாண் பணியை மேற்கொள்ளவோ எவ்வித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ளலாம் என்றும் அரசு தெளிவுப்படுத்தி விட்டது. அதேபோல், விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கும் எந்த தடையும் கிடையாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், அது சார்ந்த அரசின் மற்ற அறப் பணிகளுக்கும், வாழ்ந்த காலத்தில் மக்கள் நலம் காக்க வாழ்ந்த கலைஞர் பெயரால் அமைந்த அரங்கத்தை அரசு பயன்படுத்த உள்ளார்ந்த விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன், என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், அரசியல் கட்சிகள் வழங்கும் இடங்களை பயன்படுத்தும் தேவையில்லை என்று, முதல்வர் அறிவித்துள்ளார்.

    English summary
    There are currently 17,000 beds that can be treated in hospitals. Therefore, there is no need for using places of political parties and private parties, says Tamilnadu CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X