சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டுமா - ஒன் இந்தியா வாசகர்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க தேவையில்லை என்று 58% ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து கூறியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் அமமுக தனியாகவும், அதிமுக தனியாகவும் களமிறங்குகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவை சேர்க்க தேவையில்லை என்றே பெரும்பாலான வாசகர்கள் கருத்து கூறியுள்ளனர். கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடத்தகுந்த வாக்காளர்களும், சேர்த்தால் நல்லது என்று 22 சதவிகித வாக்காளர்களும் கருத்து கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையில் பாஜக, தேமுதிக, தமகா உள்ளிட்ட கட்சிகளும் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது.

அமமுக தனியாக களமிறங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று சொன்னாலும் யாருடன் பேசுகிறார்கள் எப்படி பேசுகிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாக எதுவுமே தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் தலைமையில் ஒரு அணியும் சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது.

அமமுக அதிமுக இணைப்பு

அமமுக அதிமுக இணைப்பு

அதிமுக உடன் அமமுக இணைய வேண்டும் என்று பாஜக விரும்புவதாக தகவல் வெளியானது. ஒருங்கிணைந்த அதிமுகதான் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார் சிடி ரவி. அமமுக தனித்து களமிறங்கினால் அதிமுகவின் வாக்குகள் சிதறுமோ என்ற அச்சமும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திமுகவை வீழ்த்துவோம்

திமுகவை வீழ்த்துவோம்

அதிமுக, அமமுகவிற்கு பொது எதிரியே திமுகதான் என்று கூறி வரும் சசிகலா, தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு விட்டு சைலண்ட் ஆகி விட்டார். டிடிவி தினகரனோ, தனது தலைமையை ஏற்று அதிமுக, பாஜக வந்தால் கூட்டணி பற்றி பேசலாம் என்று கூறியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. யாருக்காவும் எதற்காகவும் அதிமுக காத்திருக்கப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும்.

ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு

ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டுமா என்ற கேள்வி ஒன் இந்தியா வாசகர்களிடம் முன் வைக்கப்பட்டது. 12,512 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் அமமுகவை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று 19.68 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். 2464 பேர் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர்.

அமமுக தேவையில்லை

அமமுக தேவையில்லை

அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்கத் தேவையில்லை என்று 58.11 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 12,521 பேரில் 7276 பேர் அமமுக தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். சேர்த்தால் நல்லது என்று 22.21% பேர் கூறியுள்ளனர். 2781 பேர் சேர்த்தால் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Most readers are of the opinion that there is no need to include the AMMK in the AIADMK-led alliance in the Tamil Nadu Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X