சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை சார்ன்னு சொல்லாதீங்க.. அப்போ ஹாய் ராகுல்.. ஸ்டெல்லா மேரிஸில் கலக்கிய ராகுல் காந்தி!

மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெல்லா மேரிஸில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-வீடியோ

    சென்னை: மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

    இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.

    தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தமிழகம் வந்து இருக்கிறார். இதையடுத்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும்.. ராகுல் காந்தி பேச்சு! மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும்.. ராகுல் காந்தி பேச்சு!

    என்ன பேச்சு

    என்ன பேச்சு

    ராகுல் காந்தி தனது பேச்சில், நாம் பெண்களை மதிக்க வேண்டும். பெண்களின் முக்கியம்தான் ஒரு நாட்டின் முக்கியம். பெண்கள் நினைத்தால் அனைத்தையும் செய்ய முடியும். உங்களிடம் ஒரு ஆண், ஒன்றை செய்ய முடியாது என்று கூறினால் அதை நம்பாதீர்கள். ஆண்கள் செய்யும் அத்தனையும் பெண்கள் செய்யலாம்.

    சோனியா காந்தி

    சோனியா காந்தி

    என் தாய் சோனியாவிடம் இருந்து பணிவை கற்றுக் கொண்டேன். பெண்களை மதிக்க அவர்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்து துவங்குகிறது.

    சார்

    சார்

    என்னை மாணவிகள் சார் என்று அழைக்க வேண்டாம். என்னை இவ்வளவு மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. என்னை எல்லோரும் ராகுல் என்று என்று அழைத்தால் போதும், என்று ராகுல் காந்தி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    ஹாய் ராகுல்

    இதையடுத்து மாணவி ஒருவர், ஹாய் ராகுல் என்று தனது பேச்சை தொடங்கினார். உடனே அங்கு இருந்த மாணவிகள் எல்லோரும் கரகோஷம் எழுப்ப தொடங்கினார்கள். ராகுல் காந்தி பிரகாசமாக சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

    English summary
    No No Don't call me sir, Call me Rahul says Rahul Gandhi at Stella Maris Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X