சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்!

நல்ல பேச்சாளர்கள் இன்றி அஇஅதிமுக உள்ளதாக மக்களிடம் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களை கவரும் படியான பேச்சாளர்கள் இன்றி தவிக்கும் அதிமுக- வீடியோ

    சென்னை: அதிமுகவை வெற்றி பெற வைக்க, பிரச்சாரங்களில் எதிரிகளை லிஸ்ட் போட்டு கேள்விகளை கேட்க, ஜெயலலிதா என்ற ஒற்றை மனுஷியே போதுமானதாக இருந்தது! ஆனால் இப்போது எத்தனை பேர் சேர்ந்து பிரச்சாரம் செய்தாலும் ஒரு இன்ச் கூட அதிமுக மேலே வர முடியாமல் இருக்கிறது!

    அதிமுக அரசின் செயல்பாடுகள், விமர்சனங்களுக்கு பதிலடிகள், செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

    இருந்தாலும் அவை பேட்டி ரேஞ்சுக்கு இருக்கிறதே தவிர, மக்கள் மனதில் எந்தவிதத்திலும் போய் பதிவதில்லை... பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அது மட்டும் இல்லை.. கட்சி மேல் இருக்கிற இமேஜையே டேமேஜ் செய்து வரும் ஆபத்தை தந்துவிட்டனர்.

    அரவக்குறிச்சியில் வரலாறு காணாத பெரும் தோல்வி காத்திருக்காம்.. யாருக்கு தெரியுமா? அரவக்குறிச்சியில் வரலாறு காணாத பெரும் தோல்வி காத்திருக்காம்.. யாருக்கு தெரியுமா?

    ஏடாகூட பேச்சுகள்

    ஏடாகூட பேச்சுகள்

    இன்னொரு பக்கம் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் இந்த 3 வருடங்களில் தங்கள் மதிப்பை தாங்களே பேசி, பேசி குறைத்து கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சர்ச்சை, ஏடாகூட பேச்சுகள்! மிச்சம் இருப்பவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதே குறைவுதான்!

    கலையும் மக்கள்

    கலையும் மக்கள்

    அதனால் அதிமுக தரப்பில் இப்போதைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இவர்களது பிரச்சாரம் மட்டுமே மக்களிடம் எடுபடுவதாக இருக்கிறது. அதிலும் ஓபிஎஸ்-க்கு இப்போது என்ன ஆச்சோ தெரியவில்லை.. அம்மா,தங்கச்சி என்னை பார்த்தால் பாவமா இல்லையா நில்லுங்க என் பேச்சை கேளுங்க என்று கெஞ்சி கேட்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார்! இப்போது இவர்கள் இருவரும் பேசும்போது மக்கள் கலைந்து செல்லவும் ஆரம்பித்துவிட்டனர்.

    நடிகை விந்தியா

    நடிகை விந்தியா

    இது எல்லாவற்றிற்கும் மேலாக நட்சத்திர பேச்சாளர்களை அதிமுக களமிறக்கவே இல்லை. விந்தியா பிரச்சாரம் செய்வதாக சொன்னாலும், அவர் எங்கே, என்ன பேசினார் என்பது வெளியே தெரியவே இல்லை.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒரு அரசியல்வாதிக்கு அத்தியாவசியமே பேச்சு திறன்தான். மக்களை எந்த அளவுக்கு பேச்சில் கட்டி இழுக்கிறார்களோ.. அந்த அளவுக்கு அவர்கள் தொண்டர்களாக மாறுவார்கள்! ஆனால் இப்போது இப்படி ஒரு பேச்சாளர் அதிமுகவில் இல்லாதது ஆச்சரியமும், கவலையுமாக உள்ளது.

    English summary
    After Jayalalitha's death, the AIADMK did not have good speakers and Leaders
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X