சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெல்மெட் போடாட்டி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது... மாட்டிக்குவீங்க பாஸு.. சென்னை போலீஸ் மாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போலீசை பார்த்ததும், மாற்று வழியாக சென்று தப்பி விடுவதும் உண்டு. இதனை உணர்ந்த சென்னை போலீசார், சுற்றி சுற்றி வைத்துள்ள கேமரா மூலம் யார் யார் ஹெல்மெட் போடாமல் தப்பினார்கள் என்பதை அவர்களின் வாகன எண்ணை வைத்து கண்டுபிடித்து அபராத ரசீதை வீட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளனர்

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க அண்மைக்காலமாக தீவிரமாக இறங்கி உள்ளனர். குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெருநகங்களில் ஹெல்மெட் இல்லாதவர்களை பிடிப்பதற்கானவேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இனி

இதனால் போலீஸ் இருப்பதை முன்கூட்டியே அறிந்து வண்டியை வேறுபாதையில் திருப்பி பலர் எஸ்கேப் ஆகி வருகிறார்கள். போலீசாரும் இங்கு தான் தினமும்சோதனை நடத்துவது என்பதில் உறுதியாக இருப்பதால், அவர்கள் மாற்றுப்பதையில் தப்பித்து வருகிறார்கள்.

போலீஸ் உறுதி

போலீஸ் உறுதி

இந்நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுது இல்லை என போலீசார் மீது கடிந்து கொண்டது. அப்போது போலீசார் கடந்த 4 மாதத்தில் 6 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதுடன் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இனியும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தது.

மாற்றுவழியில் செல்வது

மாற்றுவழியில் செல்வது

அதன்படி தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் கடந்த சில நாட்களாக விரட்டி விரட்டி அபராதம் விதித்து வருகிறார்கள். இதனால் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போலீசை பார்த்ததும், மாற்று வழியாக சென்று தப்பி விடுவதும் உண்டு.

போலீஸ் அதிரடி

போலீஸ் அதிரடி

ஆனால் சென்னையில் இதுபோன்று போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்செல்பவர்கள் அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டதாக இனி சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டாம். ஏனெனில் உங்கள் வண்டி நம்பரை வைத்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் முகவரிக்கு அபராத ரசீதை போலீசார் அனுப்பி விடுவார்கள். இந்த வேலையும் இப்போது போலீசார் ஆரம்பித்துவிட்டார்கள்.

சிக்கிவிடுவீர்கள்

சிக்கிவிடுவீர்கள்

எப்படி என்றால், சென்னை மாநகரம் முழுவதும் 24 மணி நேரமும் திட்டதட்ட எல்லா முக்கிய சாலை சந்திப்புகளிலும் கேமராவை வைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம் சிக்னல்களை தாண்டி நிற்பவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள் தாறுமாறாக வாகனம் ஓட்டுபவர்கள் என விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கேமரா காட்சிகள் மூலமாக அபராதம் விதித்தும் வருகிறார்கள். இப்போது ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைவருக்கும் அனுப்ப அபாரதம் விதிக்கும் சம்மமனை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளார்கள்.

ஒளியவும் முடியாது

ஒளியவும் முடியாது

எனவே சென்னையில் இனி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் யார் சென்றாலும் போலீசாரின் பிடியில் சிக்குவது உறுதியாகி உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனியாரும் ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது என்ற நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக
சென்னை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 90 ஆயிரம் பேர் ஒரே நாளில் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளார்கள்.

English summary
no one can escape from chennai police, who not wear helmet while two wheeler driving, chennai police super plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X