சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை சாலைகளில் ஸ்ட்ரிக்ட் ஆகும் நோ பார்க்கிங் விதி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகர் முழுவதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் நடைப்பாதைகளை முறையாக பராமரிக்க கோரிய சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

No parking rules will be implemented strictly in Chennai order High Court

இதன்படி நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜரானார். அப்போது அவர், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேரமும் அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுத்து வருகிறோம். ஓராண்டு காலத்திற்குள் இந்த திட்டம் முழுவதுமாக நடைமுறைபடுத்தபடும்.

சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதை தடுக்க தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. சென்னையில் 11 லட்சம் நான்கு சக்கர வாகனங்ககும், 54 லட்ச இரு சக்கர வாகனங்கள் உள்ள நிலையில், அதை கணக்கில் கொண்டு 65 வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி!கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி!

உயர்நீதிமன்றத்திற்கு எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் இடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து சென்னை முழுதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்..

மேலும்,தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

English summary
No parking rules will be implemented strictly in Chennai heres after orders High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X