Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை.. மோடிதான் பிரதமர்.. செல்லூர் ராஜூ சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மோடி ஜி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்தது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

No problem in ADMK BJP alliance Modi is the Prime Minister says Sellur Raju

இதனையடுத்து நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பற்றியும் அண்ணாமலை பற்றியும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொள்ளாட்சி ஜெயராமன், எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் தேர்தல் கூட்டணி பற்றி பேசினர்.

ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் யாரும் தேர்தல் கூட்டணி பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம் என டெல்லி தலைமை அறிவுறுத்தியது.
இந்த நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ கூட்டணி சிறப்பாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறினார் அண்ணாமலை. இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பாஜகவை விமர்சிக்கவேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாகவே பேசுகிறார். தமிழ்நாட்டில் சனதானம் ஒழிக்கப்பட்டு விட்டது. பெரியார்,அண்ணா காலத்திலேயே ஒழிக்கப்பட்டு விட்டது. அதிமுகவில் எந்த பேதமும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, தம்பி உதயநிதி கிட்ட நான் கேட்கறேன்... உங்க கட்சியில் ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக்க முடியுமா என்று கேட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. சத்துணவு திட்டத்திலேயே சனாதனம் வந்து விட்டது என்றார்.

எல்லாருக்கும் எல்லாமும் கொடுக்கப்பட்டது. திமுகவில் தேர்தலுக்கு தேர்தல் எதையாவது பேசி சிறுபான்மை வாக்குக்காக பேசுகின்றனர். கைலி கட்டியவர் தீவிரவாதி என்று சொன்னது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான். அதெல்லாம் உதயநிதிக்கு தெரியாது. அவருக்கு நடிகைகள் மட்டும்தான் தெரியும் என்றும் செல்லூர் ராஜூ சொன்னார்.

பதவிக்கு வரமாட்டேன் என்று சொன்னார் உதயநிதி. இது சங்கரமடம் இல்லை என்று சொன்னார் மு.க ஸ்டாலின். தேர்தலுக்கு முன்பு ஒன்று பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் உதயநிதிக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் செல்லூர் ராஜூ. இன்றைக்கு மக்கள் எல்லாம் திமுக ஆட்சி மீது கோபத்தோடு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ. 2000 கொடுத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் 1 கோடியே 6 ஆயிரம் பேருக்குதான் கொடுத்திருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு செய்வது வேறு. எல்லாம் அல்வாதான். மாணவர்கள் கல்விக்கடன் ரத்து என்று சொன்னார்கள், பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் அதை எல்லாம் மறந்து விட்டனர் என்று சொன்னார் செல்லூர் ராஜூ.

அதிமுக பாஜக கூட்டணி உட்கட்சி பூசல் என்று உதயநிதி சொன்னது பற்றி செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன செல்லூர் ராஜூ, அதிமுக பாஜக கூட்டணி பற்றி உதயநிதிக்கு வரலாறு தெரியாது. நாங்கள் யார் காலிலும் விழவேண்டிய அவசியமில்லை. பாஜகவிற்கும் எங்களுக்கும் ஏதாவது பிரச்சினை என்று சொன்னோமா? மாநில பாஜகு தலைவர் சொன்னது தவறு. ஜெயலலிதா பற்றியும், அண்ணா பற்றியும் பேசியது தவறு என்று கூறியிருக்கிறோம். இப்போது அண்ணாவைப்பற்றி சொல்ல வேண்டிய காரணம் என்ன? திமுக ஆட்சியின் குறையப்பற்றி கூறலாம். பேசுவதற்கு எத்தனையோ இருக்கிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தெய்வமாக வணங்கும் கட்சி அதிமுகதான். தங்க கவசம் கொடுத்தவர் ஜெயலலிதா. நாங்கள் தேவர் பேசியதையோ நடந்த நிகழ்வுகளையோ இதுவரை சொன்னதில்லை. எங்கள் கொள்கையோ அண்ணாயிசம் என்று கூறி வருகிறோம். எதையே திருப்பிவிட பார்க்கின்றனர்.

மோடி ஜி, நட்டாஜி, அமித்ஷா ஜி பற்றி பிரச்சினையில்லை. தலைவர் இப்படி பேசுகிறார் என்று பதிவு செய்தோம். இதெல்லாம் சும்மாங்க என்று சொன்னார்.
இப்ப எல்லாமே விலை கூடிப்போச்சு. யானைப்பசிக்கு சோளப்பொறி போல ரூ.1000 தருகின்றனர். எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மோடிஜிதான் பிரதமர் ஆக வரவேண்டும் என்று சொல்கிறோம். மாநில தலைவர் பேசியதைத்தான் தவறு என்று சொல்கிறோம் என்று உறுதியாக கூறியுள்ளார் செல்லூர் ராஜூ.

அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது நாடகம் என்று புகழேந்தி உள்ளிட்டவர்கள் கூறினர். அவர்கள் சொன்னது போலவே இப்போது அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் செல்லூர் ராஜூ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+