சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மற்ற மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது... நீதிபதிகள் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் அனைத்து வளங்கள் இருந்தும் அதை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்திய போது நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No prosperity in Tamil Nadu? High court judges suffering

இதனிடையே நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசு புயல் பாதிப்புக்கு வழங்கிய நிவாரணத்தில், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் உள்ளன. நகர்ப்புறப் பாதிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அழுத்தமும் ஊரக பகுதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தெரிவித்தது.

தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளைப் புறக்கணிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததோடு, டெல்லி நிர்பயாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என வேதனையுடன் கூறினர்.

English summary
The Madras High Court orders to the Tamil Nadu government protect watersheds
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X