சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. காலாண்டு லீவு ரத்து என்பது வதந்தி.. பள்ளி கல்விதுறை அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: காலாண்டு லீவு ரத்து என்ற அறிவிப்பினை கேள்விப்பட்ட மாணவர்கள் அப்படியே நொறுங்கிபோய் விட்டனர். ஆனால், அதுவெறும் வதந்திதான், விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வழக்கமாக சனி, ஞாயிறு லீவுக்கே பிள்ளைகளை கையில் பிடிக்க முடியாத நிலையில், காலாண்டு தேர்வு என்றால் விடுவார்களா? அப்படித்தான், தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பள்ளிகளில் இப்போது காலாண்டு தேர்வு முடிந்து விட்டது. வரும் 23-ம் தேதி முதல் லீவு ஆரம்பிக்கவும் உள்ளது.

No quarterly Exams holiday for School Students

இப்படி லீவு தொடங்க உள்ள நிலையில், காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, 23-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை ரத்து என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அத்துடன் விடுமுறையில் மாணவர்களை ஸ்கூலுக்கு வரவழைத்து, காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்தப்படும் என்றும், இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவ தொடங்கின.

இதைக் கேட்டு மாணவர்கள் தரப்பில் அதிர்ந்து போய்விட்டனர். லீவு நாட்களிலும் ஸ்கூலுக்கு போகும் நிலைமை வந்துள்ளதே என்றும், காலாண்டு லீவில் சுற்றுலாவுக்கும் வெளியூருக்கும் போக வேண்டும் என்று பிளான் போட்டு வைத்தது எல்லாமே நொறுங்கிவிட்டது போலவும் உணர்ந்தார்கள்.

No quarterly Exams holiday for School Students

ஆனால், விடுமுறை ரத்து என்ற தகவல் வதந்திதான் என்றும், காலாண்டு தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பள்ளிக்கல்வி துறை தற்போது தெரிவித்துள்ளது.

பல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த பல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த "ஷா"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் நச்!

மேலும், செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை என 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகளை விருப்பமான பள்ளிகள் நடத்தலாம், அதில் விருப்பமான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்துதான் மாணவர்கள் தரப்பு நிம்மதி அடைந்து வருகின்றனர்.

English summary
DPI Announced that, No quarterly Exam holidays for- tamilnadu school students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X