சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட அதிமுக.. யாதவ வாக்கு வங்கி ஒரே நாளில் காலி!

Google Oneindia Tamil News

Recommended Video

    20 தொகுதிக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

    சென்னை: அதிமுக எப்படி இதை அனுமதித்தது என தெரியவில்லை... தெரிந்தே இப்படி ஒரு தப்பை செய்து விட்டது ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான்!

    அனைத்து ஜாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் திட்டங்கள், வியூகங்கள் வகுக்கப்படும். இதில் கருணாநிதி, ஜெயலலிதா கறாராகவும், அனைத்து தரப்பினரையும் அணைத்து செல்லக்கூடியவர்களாகவும் இருந்தனர்.

    ஆனால் முக்கியமானவர்கள் யாதவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி

    சிவகங்கை

    சிவகங்கை

    உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம், மதுரை மாவட்டத்தில் சுமார் 2 லட்சமும் சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரமும் யாதவ சமூக மக்கள் வாக்களிப்பதாக சர்வே தெரிவிக்கிறது.

    ராஜகண்ணப்பன்

    ராஜகண்ணப்பன்

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பிடும்படியான யாதவ சமுதாயத்தின் வாக்கு வங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ராஜ கண்ணப்பன் விலகலால் அதில் பெரும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 சட்டசபைத் தொகுதிகளில் யாதவ சமூக வாக்குகள் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு வலுவாக உள்ளது.

    சட்டமன்ற தேர்தல்

    சட்டமன்ற தேர்தல்

    ஆக, தென்தமிழகத்தின், அதாவது யாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ராஜகண்ணப்பனுக்கு வழக்கம்போலவே சீட் தரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என எது நடைபெற்றாலும் ராஜகண்ணப்பன் கால் பதித்து வாக்கு சேகரிக்காத தென்மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் எந்த குக்கிராமும் இருக்காது.

    கண்டன போஸ்டர்

    கண்டன போஸ்டர்

    ஆனால் இதெல்லாம் தெரிந்தும்கூட கண்ணப்பனுக்கு சீட் தரப்படவில்லை. இதற்கு உள்கட்சி பூசல், சில அமைச்சர்களின் தலையீடுகள், கண்ணப்பன் மீதுள்ள பொறாமை.. போன்றவை காரணமாக சீட் தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி ஆனது கண்ணப்பன் மட்டுமில்லை, யாதவ சமுதாய மக்களும்தான். உடனடியாக அதிமுகவை கண்டித்து போஸ்டர் ஒட்டி எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

    ஸ்டாலினுடன் சந்திப்பு

    ஸ்டாலினுடன் சந்திப்பு

    மேலும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டதும், கோபத்தில் ஒரே நாளில் திமுக தலைவரை சந்தித்து ஆதரவு தரும் நிலை கண்ணப்பனுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே திமுகவிலிருந்து போட்டியிட்டு வென்று பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு போய், இப்போது திரும்பவும் திமுகவுக்கு வந்திருக்கும் கண்ணப்பனுக்கு எந்த அளவுக்கு அங்கு முக்கியத்துவம் இருக்கும், ஸ்டாலின் அவரை எப்படி பயன்படுத்தி கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

    பிரதிபலிக்கும்

    பிரதிபலிக்கும்

    ஆனால் ஒன்றிரண்டு அமைச்சர்களை கூட சமாளிக்க முடியாமல், அவர்களை அடக்கக்கூட திறன் இல்லாமல் யாதவ மக்களின் சதவீத வாக்கு வங்கியை இன்றைக்கு அதிமுக இழந்துவிட்டது. இது வரப்போகிற தேர்தலில் மட்டுமல்ல, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் இது பிரபலிக்கவே செய்யும். கண்ணப்பனுக்கு சீட் இல்லாவிட்டாலும் அதே சமுதாயத்தை சேர்ந்த வேறு ஒருவருக்கு சீட் தந்திருந்தாலும் அந்த இன மக்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்திருக்கும்.

    நெருக்கடி

    நெருக்கடி

    அதையும் அதிமுக தலைமை செய்ய தவறியதுடன், யாருடைய தூண்டுதலுக்கோ அல்லது யாருடைய வற்புறுத்தலுக்கோ இணங்கி விட்டது மாபெரும் தவறு! ஆனால் இது அதிமுகவுக்கு தேவையில்லாத தலைவலி.. தேவையில்லாத நெருக்கடி.. இந்தவிஷயத்தில் அதிமுக செய்திருப்பது யானை தன் மேல மண் போட்டு கொள்வதற்கு சமம் என்றுதான் சொல்ல வேண்டும்!

    English summary
    AIADMK has not been allocated for the benefit of the Yadavas community. This has caused great dissatisfaction among the community.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X