சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே நோக்கியா ஆலையில் பணியாற்றிய 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆலையில் நோக்கியா நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனிடையே ஆலையில் எத்தனை தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை நோக்கியா வெளியிடவில்லை.

சென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சி சென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சி

நோக்கியாவில் கொரோனா

நோக்கியாவில் கொரோனா

ஆனால் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரத்தினர், நோக்கியா ஆலையில குறைந்தது 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். கொரோனாவை தடுக்க சமூக விலகல் மற்றும் கேண்டீன் வசதிகளில் மாற்றங்கள் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக நோக்கியா நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.

நோக்கியா நம்பிக்கை

நோக்கியா நம்பிக்கை

கடந்த சில வாரங்களாக இந்த தொழிற்சாலை கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியது.ஆனால் பணியாளர்களக்கு கொரோனா அதிகமானதால் தற்காலிகமாக ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியா தனது பொருளாதாரத்தை காப்பாற்ற உலகின் மிகப்பெரிய லாக்டவுனை தளர்த்தியுள்ளது. நாங்கள் கட்டுப்பாடுகளுடன் எங்கள் ஊழியர்களுடன் விரைவில் உற்பத்தியை தொடங்குவோம் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.

ஒப்போ நிறுவனம் மூடல்

ஒப்போ நிறுவனம் மூடல்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ கடந்த வாரம் டெல்லியின் புறநகரில் உள்ள ஆலையில் மீண்டும் திறந்த நிலையில், அங்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிமாக மூடியுள்ளது. நோக்கியா மற்றும் ஒபோவில் ஏற்பட்ட கொரோனா பரவல் இரண்டு மாத நாடு தழுவிய லாக்டவுனை எளிதாக்குவதற்கான சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

தொடர்ந்து அதிகரிப்பு

தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 145,380 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4,167 பேர் இதுவரை கொரோனாவல் இறந்துள்ளனர், இது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிககுறைந்த பாதிப்பு ஆகும். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Recommended Video

    கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

    English summary
    Nokia Shuts Plant in Tamil Nadu after 42 Test Positive for Coronavirus. but Nokia did not disclose how many workers at the plant in Sriperumbudur in Tamil Nadu tested positive,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X