சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைவம் சாப்பிடுபவர்களின் தாம்பத்ய வாழ்க்கைதான் ரொம்ப ருசிக்குமாம் - ஆய்வு சொல்லுது மக்களே

அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோரின் தாம்பத்திய வாழ்க்கைதான் ரொம்ப உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமாம்.

Google Oneindia Tamil News

சென்னை: திருமணமானவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் அது விவாகரத்து வரை கொண்டு போய் விடும். கல்யாண வாழ்க்கையில் கலவரம் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனில் அந்த விசயத்தில் கெட்டிக்காரத்தனமாக இருக்க வேண்டும் என்றுதான் கணவன் மனைவி இருவருமே விரும்புவார்கள். அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவம் சாப்பிடுபவர்கள்தான் அந்த விசயத்தில் படு சுட்டியாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காலம் காலமாக மனிதர்களின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யார் யார் எந்த மாதிரியான விசயங்களில் உற்சாகமாக ஈடுபட்டு வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துகிறார்கள் என்று பல ஆய்வுகள் நடந்து முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

இப்போது புதிய ஆய்வு ஒன்று சைவ பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவம் சாப்பிடுபவர்கள்தான் தாம்பத்ய வாழ்க்கையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களாம்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

ஐரோப்பாவின் ஆன்லைன் செய்தி நிறுவனமான ஹக்னால் டிஸ்பேட்ச் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சைவ உணவு சாப்பிடும் 500 பேரும் அசைவ உணவு சாப்பிடும் 500 பேரும் பங்கேற்றனர்.

சைவ பிரியர்களின்

சைவ பிரியர்களின்

அவர்கள் எடுத்த ஆய்வில் 84 சதவிகித சைவப் பிரியர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அசைவத்தினரோ 59 சதவிகிதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

அசைவ பிரியர்கள்

அசைவ பிரியர்கள்

ஆய்வில், சைவம் சாப்பிடுவோரைக் காட்டிலும் அசைவம் சாப்பிடுவோர் படுக்கை அறையில் சுயநலமாக இருப்பதாகவும், அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை செழிப்பாக இருப்பதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சைவ உணவில் என்னதான் இருக்கு

சைவ உணவில் என்னதான் இருக்கு

காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் என சைவ உணவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதை சுவையே அலாதியானது. இதுதான் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது என்கிறார் ஐரோப்பிய டேட்டிங் ஆப் நிறுவனர் ஜெசிகா லியோனி.

சந்தோஷமான சமாச்சாரம்

சந்தோஷமான சமாச்சாரம்

சைவ உணவுகள், கீரைகள் சாப்பிடுவதால் அதிக சுறுசுறுப்போடும் நீண்ட நேரம் ஆற்றலோடு இயங்க முடிவதாக கூறுகின்றனர் சைவ பிரியர்கள். இந்த உணவுகள் மூலம் புதுப்புது யுக்திகளை கையாண்டு தங்களின் துணையை சந்தோஷமாக வைத்திருப்பதாக தெரிவித்தனர் சைவ பிரியர்கள்.

ஹார்மோன் சுரப்பு

ஹார்மோன் சுரப்பு

இதில் அறிவியல் ரீதியான உண்மையும் உள்ளது. சைவ உணவுகளில் அதிகமாக துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக வாழைப்பழம், அவகோடா, பட்டாணி வகைகளில் லிபிடோ அமிலம் சுரக்கிறது. இவைதான் பாலியல் உணர்ச்சியைத் தூண்டுவதில் மிக முக்கிய சத்துகளாகும்.

உற்சாகமான உறவு

உற்சாகமான உறவு

சைவம் சாப்பிடுபவர்களுக்கு மூடு வரவழைக்கும் ஹார்மோன் செரோடினின் அதிக அளவு சுரக்கிறது. இது தம்பதியரிடையே உற்சாகத்தை அதிகரிக்கும். இதன் மூலம் தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியரிடையே சுறுசுறுப்பு அதிகமாவதோடு மகிழ்ச்சியும் அதிகரிக்கிறதாம். நம்ம பாக்யராஜ் அதனால்தான் முருங்கைக்காய் சமாச்சாரத்தை முன்னாடியே சொல்லியிருக்கிறாரே. சரிதானே.

English summary
The survey reported by UK-based Hucknall Dispatch said that non-vegetarians are “selfish in bed and unhappy in their sex lives compared to vegetarians
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X