சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai and Tamilnadu set to receive heavy reainfall in next 24 Hours NE monsoon sets

    சென்னை: தமிழகத்தில் ஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    வானிலை தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    north east monsoon started in tamil nadu from today

    நாளை தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு நாளைக்கு முன்பே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், கோவை, திருப்பூர, ஈரோடு, சேலம், நாமக்கல் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 சென்டிமீட்டர் மழையும் பாம்பனில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்றார்.

    English summary
    north monsoon started in tamil nadu from yesterday, Light to moderate rain is occur at many places over Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X