சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படையெடுக்கும் வட மாநிலத்தவர்.. நிறம் மாறும் தமிழகம்.. குக்கிராமத்திலும் கியாரே.. குர்குரே!

Google Oneindia Tamil News

Recommended Video

    #TamilNaduJobsForTamils | அனல் பறக்கும் நாம் தமிழர் பிரச்சாரம்! டிரண்டாகும் ஹேஷ்டேக்!- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுவதும் குக்கிராமங்களில் கூட வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரித்து வரும் இவர்களால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் நிறம் மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாழ்வதற்கு வழியில்லாமல் கஷ்டப்படும் அத்தனை பேருக்கும் அட்சய பாத்திரமாக இருக்கும் மாநிலம் என்றால் நிச்சயம் தமிழகம் தான். தமிழகத்தில் சர்வசாதாரணமாக மாதம் 10ஆயிரம் சம்பளம் 3 நேர உணவு என்பது உடல் உழைப்பு தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கிறது.

    இதை கேள்விப்பட்டு தினசரி வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி பல ஆயிரம் பேர் ரயில்களில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சென்னை, திருப்பூர், கோவை மற்றும் ஈரோட்டிற்கு மிக அதிகமாக வருகிறார்கள்.

    மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை

    வடமாநிலத்தவர் படையெடுப்பு

    வடமாநிலத்தவர் படையெடுப்பு

    இதேபோல் தான் சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், எந்த மாவட்டத்தில் பார்த்தாலும் இப்போது கணிசமாக வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் சொந்த மாநிலங்களில் அன்றாடம் பிழைப்பதே கடினம் என்ற ரீதியில் வாழ்கிறார்கள். அதனால் தினசரி வேலை, உணவு, நல்ல வாழ்க்கை என்பதை தரும் தமிழகத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.

    ஓட்டல் வேலை

    ஓட்டல் வேலை

    கட்டிடம் கட்ட, பானி பூரி விற்க, முடிவெட்ட, ஓட்டலில் சப்ளை செய்ய, உணவு சமைக்க, டீ விற்க, செங்கல் சூளையில் செங்கல் சுட, தறி ஓட்ட, ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்ய, கழிவறைகளை சுத்தம் செய்ய, ஓர்க்ஷாப்பில் வேலை செய்ய, இப்படி பல தொழில்களில் வட மாநில தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்துவிட்டார்கள்.

    திருப்பூரில் அதிகரிப்பு

    திருப்பூரில் அதிகரிப்பு

    சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர் என தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பரவலாக அதிகரித்துள்ளது. இதேபோல் குக்கிராமங்களில் கூட செங்கல் சுடும் வேலைகளில் அவர்கள் தான் இருக்கிறார்கள். எப்படி என்றால் உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் தமிழர்களைவிட வடமாநிலத்தவரின் எண்ணிக்கையே அதிகம் என்ற அளவுக்கு தமிழகம் வந்துவிட்டது.

    நீண்ட நேரம் வேலை

    நீண்ட நேரம் வேலை

    குறைந்த சம்பளம் , நீண்ட நாள் வேலை, நீண்ட நாள் செய்வார்கள், அடிக்கடி விடுமுறை எடுக்க மாட்டார்கள், சொன்னதை எதிர்த்து பேசமாட்டார்கள் போன்ற காரணங்களால் தொழில் நடத்துபவர்கள் வடமாநில தொழிலாளர்களை அதிகம் விரும்புகிறார்கள்.

    முதலாளிகள் மனநிலை

    முதலாளிகள் மனநிலை

    அதேநேரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை வைத்தால், அதிக சம்பளம் கேட்பது, வார விடுமுறை கேட்பது, ஏதாவது கோபத்தில் சொன்னால் எதிர்த்து பேசுவது, அடிக்கடி நிறுவனம் மாறுவது என்று இருப்பார்கள் என்ற எண்ணமும் முதலாளிகள் மத்தியில் உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளர்களுக்கு சிவப்பு கம்பளமும், நம்மூர் ஆட்கள் என்றால் யோசித்து முடிவெடுப்பது சர்வசாதாரணமாக இருக்கிறது.

    கலாச்சார பிரச்னை

    கலாச்சார பிரச்னை

    வடமாநிலத்தவர்கள் வருகையால் நமக்கு தொழிலாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் பின்னாளில் அது மிகப்பெரிய பிரச்னையை தமிழர்களுக்கு உருவாக்கும். திருட்டு பிரச்னை ஏற்கனவே உள்ள நிலையில், கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக, இனரீதியாக, வேலை வாய்ப்பு என எல்லாவற்றிலும் பிரச்னையை உருவாக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்குத்தான் வேலை என்று கோஷம் போடும் நாம் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு தமிழ் உணர்வு என்ற விஷயம் தமிழகத்திலேயே மறைந்து மொத்தமாக தமிழகம் வடமாநிலமாக நிறம் மாறிவிடும். .

    English summary
    north indians increased in many places in tamilnadu, tamil peoples not aware of alert the issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X