சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு

    சென்னை: சென்னையில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்ததை போல் இன்று இரவும் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட போகிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாத நிலை இருந்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு தூரல்கள் இருந்து வந்தது.

    இந்த தூரல்களால் பூமி நனைந்ததே தவிர நிலத்தடி நீரெல்லாம் உயரவே இல்லை. தண்ணீருக்காக இன்னும் அல்லல்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.

    பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான் பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான்

    கனமழை

    கனமழை

    இந்த நிலையில் நேற்றைய இரவு 7.30 மணி அளவில் சென்னையில் வளசரவாக்கம், கிண்டி, அமைந்தகரை, முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், நொளம்பூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், ஆவடி, கொளத்தூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    சென்னையில் மழை

    சென்னையில் மழை

    இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழையே இல்லாத இருந்த சென்னையில் இடி, மின்னலுடன் மழையை பார்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மிதமான மழை

    மிதமான மழை

    இந்த நிலையில் இதுகுறித்து நார்வே வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்றை போல் இன்றும் மாலையும், நாளை மாலையும் கனமழை கொட்ட போகிறது. இது நள்ளிரவு வரை தொடருமாம். பின்னர் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்பு

    கனமழை பெய்ய வாய்ப்பு

    இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கனமழை பெய்ய போகிறது. வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த மழை படிப்படியாக குறைகிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயருமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    English summary
    Norway Meteorological Centre says that Chennai will get heavy rain for today and tomorrow also as we got in yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X