சென்னையில் எந்தெந்த தேதிகளில் மழை பெய்யும்.. நார்வே வானிலை மையம் சொல்வதை கேளுங்க!
Recommended Video
சென்னை: சென்னையில் எப்போதெல்லாம் மழை பெய்யும் என்ற தகவலை நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து வந்ததால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போயின. இந்த நிலையில் தமிழகத்துக்கு வர வேண்டிய புயலும் வராமல் ஒடிஸா பக்கம் சென்றுவிட்டது. இதனால் சென்னையில் வெயில் வாட்டி வதைத்தது. கடும் வறட்சி நிலவியது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. ஏதோ பூமியை நனைத்து விட்டு சென்ற மழைத்துளிகள் அதன்பின்னர் சென்னை பக்கம் வரவேயில்லை.
அடுத்த நாள்
இந்த நிலையில் இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் சென்னையில் 13-ஆம் தேதி மாலை முதல் இரவு 11 மணி வரை வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யும். இந்த மழை அடுத்த நாள் காலை 5 மணி வரை தொடரும்.
17-ஆம் தேதி
அதேபோல் 15-ஆம் தேதி மாலையும் 5 மணி முதல் அடுத்த நாள் 16-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். இதே நிலை 17-ஆம் தேதி வரை நீடிக்கிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு மழை
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தென்மேற்கு பருவமழையில் இடைவெளி விட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் நாளை முதல் டமால் டுமீல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.