சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நார்வேயிலிருந்து நல்ல செய்தி.. ஒரு வாரத்துக்கு கனமழை.. இனி ஆஃப் மோடுக்கு செல்லும் பேன், ஏசி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: மக்கள் பெரும் மகிழ்ச்சி!

    சென்னை: சென்னையில் ஒரு வாரத்துக்கு விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமாக வடஇந்தியாவில் சூறாவளி போல் சுழன்று சுழன்று அடித்து வருகிறது. இதனால் குஜராத், பீகார், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களும் கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட தென்னிந்தியாவிலும் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் மேற்கண்ட மாநிலங்கள் நீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் வெப்பசலனத்தால் மழை பெய்து வருகிறது. நாளை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஜில்லென்று மாறிய வானிலை.. சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை! ஜில்லென்று மாறிய வானிலை.. சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை!

    கனமழை

    கனமழை

    இந்த நிலையில் நார்வே வானிலை மையமோ இன்னும் ஒரு வாரத்துக்கு சென்னையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும்.

    கனமழை

    கனமழை

    இதைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை காலை நேரத்திலும் இரவு நேரத்திலும் கனமழை பெய்யும் நடுவில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. அது போல் செவ்வாய்க்கிழமை எடுத்து கொண்டால் அந்த நேரத்தில் காலை நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு. பின்னர் வெயில் வந்து மாலை நேரத்தில் லேசான மழையும் இரவு நேரத்தில் கனமழையும் பெய்யும்.

    காலை வேளையில் நல்ல மழை

    காலை வேளையில் நல்ல மழை

    புதன்கிழமையும் வியாழக்கிழமையும் லேசான மழை பெய்யும். பின்னர் 23, 24 ஆகிய தேதிகளில் மழை அறவே கிடையாது. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை (25-ஆம் தேதி) காலை வேளையில் நல்ல மழை பெய்யும்.

    மழைநீர் சேகரிப்பு

    மழைநீர் சேகரிப்பு

    அதுபோல் திங்கள்கிழமை லேசான மழை பெய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்துக்கு நல்ல மழை பெய்யும் என்பதால் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வைத்திருக்காதவர்கள் வைத்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவர் என தெரிகிறது.

    English summary
    Norway Meteorological Centre says that Chennai will gets more rain for a week as because of convergence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X