சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பருவமழையை போல் டிமிக்கி கொடுத்த ஃபனி.. சென்னைக்கு ஒரு சொட்டு மழை கூட பெய்யாது.. நார்வே ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயல் சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

    சென்னை: பருவமழையை போல் இந்த ஃபனி புயலும் தமிழகத்துக்கு பலனளிக்கவில்லை என்பது நார்வே வானிலை மையத்தின் அறிக்கை மூலம் தெரிகிறது.

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் சென்னை- புதுவை அருகே புயல் கரையை கடந்தால் சென்னையில் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 4 வரை கனமழைக்கு வாய்ப்பு என நார்வே வானிலை மையம் தெரிவித்தது. இதனால் சென்னையில் தகிக்கும் வெப்பமும் , தண்ணீர் பஞ்சமும் அகலும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தமிழகத்தை விட்டு செல்லும் ஃபனி.. அதிக வெப்பத்தால் ஆபத்து.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை தமிழகத்தை விட்டு செல்லும் ஃபனி.. அதிக வெப்பத்தால் ஆபத்து.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

    சொட்டு மழை

    சொட்டு மழை

    ஆனால் இந்த புயலின் திசை தமிழகத்தை விட்டு விலகி ஆந்திரம் நோக்கி செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு மழைக்கு கூட வாய்ப்பில்லை என தெரிகிறது.

    தாக்கம் குறையும்

    தாக்கம் குறையும்

    இதையே நார்வே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. அதில் வரும் 28-ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை சென்னைக்கு மழையே கிடையாது என்று கூறியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலில் கொஞ்சமாவது மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    நீர் நிலைகள்

    நீர் நிலைகள்

    ஆனால் ஃபனி தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் சென்னைக்கு மழை இல்லை. கோடையில் கிடைக்கக் கூடிய இந்த மழையும் போய்விட்டது. ஏற்கெனவே தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இனி தண்ணீருக்காக மக்கள் பாடாய்படப் போவதை எண்ணி வேதனை தெரிவிக்கின்றனர்.

    வாட்டி வதைக்கும் வெயில்

    வாட்டி வதைக்கும் வெயில்

    கடந்த 1998, 2003-ஆம் ஆண்டுகளில் கோடையில் உருவாக இருந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி பர்மாவுக்கு சென்றது. இதனால் அனல்காற்றால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த முறையும் அதிக வெப்பத்தால் பாதிப்பு ஏற்படுமோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

    English summary
    Norway Meteorological Department says that there will be no rain for Chennai as Fani cyclone curving away from Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X