சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா.. வதந்திகளை நம்ப வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேணடாம் என்றும், கொரோனாவால் எல்லோரும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை என்றும் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்,

Recommended Video

    Corona Virus Update : எத்தனை பேருக்கு கொரானா?

    தமிழகத்தில் ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    Not everyone is wearing a mask over coronavirus: Minister Vijayabaskar

    அப்போது அவர் கூறுகையில், இது வரை 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்தோம். அதில் ஒருவருககு பாசிட்டிவ் (நோய் உள்ளது) என வந்துள்ளது. 55 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. மீதி 8 பரிசோதனையில் உள்ளது.

    டாக்ஸி டிரைவர் முதல்.. யாரை எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சந்தித்தாரோ அல்லது யாருடன் எல்லாம் அவர் பேசினாரோ மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் (27 பேரையும்) தேடி கண்டுபிடித்து கண்காணிப்பில் வைத்துள்ளோம்.

    தமிழகத்தை பொறுத்தவரை சீனாவின் வுகான் மாகாணத்தில் பாதிப்பு வந்த நாளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தான் உடனே அந்த நோயாளிளை நாங்கள் கண்டுபிடித்தோம்.

    தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு வந்தது என்பதை காட்டிலும், தமிழகத்திற்கு கொரோனா பாதிப்புடன் வந்த் ஒருவரை ஸ்கிரீன் டெஸ்ட் செய்து பின்னர் அவருக்கு சோதனை நடத்தியதில் பாசிட்டிவ் என்பதை கண்டுபிடித்து செய்தியாளர்களான உங்களுக்கும் நாங்கள் தகவல் சொல்லிவிட்டோம். அத்துடன் அவருக்கு நாங்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறோம் என்பதும் முக்கியமான விஷயம். கொரோனாவால் எல்லோரும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை" என்றார்.

    English summary
    Minister Vijayabaskar said that Not everyone is wearing a mask over coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X