சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்கள் மின் இணைப்பு தொடர்பாக தங்களின் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை கூறியுள்ளார்.

Not To be fooled by text messages in the name of EB, Says Chennai Police Commissioner Shankar Jiwal

தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கை மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்யும் கும்பல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பரிசு வந்துள்ளது. குறைந்த செலவில் உல்லாச சுற்றுலா என குறுஞ்செய்தி செய்து ஏமாற்றி வந்தவர்கள் தற்போது மின்வாரியத்தின் பெயரிலும் ஏமாற்ற துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கோவில் சொத்துக்களின் வருவாயை வசூலித்தாலே.. பற்றாக்குறையில்லா பட்ஜெட் கிடைக்குமே! உயர்நீதிமன்றம் கோவில் சொத்துக்களின் வருவாயை வசூலித்தாலே.. பற்றாக்குறையில்லா பட்ஜெட் கிடைக்குமே! உயர்நீதிமன்றம்

இதனால்பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என செல்போன் எண்ணை சேர்த்து குறுஞ்செய்தியாக அனுப்புவர்.

இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம் வங்கி கணக்கு விபரங்களை பெற்று பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டும். மேலும் அத்தகைய செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்தில் இருந்து இதுபோன்ற குறுஞ்செய்தியோ, போன் அழைப்புகளோ வராது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

English summary
Chennai City Police Commissioner Shankar Jiwal has advised the public not to be fooled by text messages sent to their mobile phones regarding electricity connection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X