சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்பிஆர்.. என்சிஆர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.. பாகுபட்டை உருவாகுமோ.. ஸ்டாலின் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: இப்போது என்பிஆருக்கு (தேசிய மக்கள் தொகை பதிவேடு) 4000 கோடி ரூபாய் செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுத்துள்ளது. இந்த சூழலில பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த பேரணியில் பேசுகையில், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவருவது (என்ஆர்சி) குறித்து எந்த விவாதமும் அரசு இதுவரை நடத்தவில்லை என்றார்.

தடுப்பு முகாம்கள் அமைக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவருவதுகுறித்து அரசு எந்த முடிவும் இதுரை எடுக்கவில்லை என்றார்.

 வன்முறையா பண்றீங்க.. தக்க பாடம் கற்பிக்கப்படும்.. அமித் ஷா பேச்சு வன்முறையா பண்றீங்க.. தக்க பாடம் கற்பிக்கப்படும்.. அமித் ஷா பேச்சு

அமித் விளக்கம்

அமித் விளக்கம்

இதையடுத்து அமித்ஷாவின் கருத்துக்கு முரண்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுதது இதுபற்றி திங்கள்கிழமை விளக்கம் அளித்த அமித்ஷா " பிரதமர் மோடி சொல்வது உண்மை தான், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவது குறித்து இதுவரை நாடாளுமன்றத்தில் அரசு விவாதிக்கவில்லை.அமைச்சரவையிலும் விவாதிக்ககப்படவில்லை என்றார்.

என்பிஆர்

என்பிஆர்

அத்துடன் இப்போது தொடங்க உள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (npr), மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (ncr) எந்த தொடர்பும் இல்லை என்று அமித் ஷா விளக்கம் அளித்தார்.

ஓவைசி தாக்கு

ஓவைசி தாக்கு

இதனிடையே நேற்று , ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாருதின் ஒவைசி, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய இரண்டு செயல்முறைகளும் ஒன்று தான் என்று கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்றும் இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இரண்டும் ஒன்று தான்

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் என்பிஆர் மற்றும் என்சிஆர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் விமர்சித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில். அனைத்து மத மக்களிடையே பாகுபட்டை என்பிஆர் உருவாக்குமோ என்றே கவலை உருவாகி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்போது NPR க்கு 4000 கோடி ரூபாய் செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

English summary
mk stalin on twitter: NPR and NRC are two sides of the same coin. Under the #CAA2019, as amended, there is a concern that NPR will create an ecosystem that will discriminate against all religions. The Central Government must explain what is the need to spend INR 4000 crore on NPR now?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X