சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    நிவாரண முகாம்களில் உதவும் நாம் தமிழரின் அசத்தல் ஐடியா- வீடியோ

    சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மாவட்ட மக்கள் உதவி வருகின்றனர்.

    இன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகிறது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வரும் உதவிகள். காரணம், அந்த அளவுக்கு மிகப் பெரிய அளவிலான பாதிப்பை டெல்டா சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பு. அதை விட முக்கியமானது, அத்தனை பேரும் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

    எத்தனை பொருட்களை அனுப்பினாலும் அது போதாது என்ற நிலையில்தான் உள்ளது காவிரி டெல்டா. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்டா பகுதி மக்கள்.

     கஜா புயல் களத்தில் கல்லூரி மாணவர்கள்.. நேரில் போய் சபாஷ் போட்ட ஜிவி பிரகாஷ்! கஜா புயல் களத்தில் கல்லூரி மாணவர்கள்.. நேரில் போய் சபாஷ் போட்ட ஜிவி பிரகாஷ்!

    முதல் ஆளாய் நாம் தமிழர்

    முதல் ஆளாய் நாம் தமிழர்

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி படு ஜரூராக பணியாற்றி வருகின்றனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்கள் இரவு பகலாக காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.

    குவியும் பாராட்டுகள்

    குவியும் பாராட்டுகள்

    புயல் பாதித்த பகுதிகளில் யாரும் அழைக்காமலேயே நாம் தமிழர் கட்சியினர்தான் முதலில் களம் இறங்கி பணிகளில் இறங்கியதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் உள்ளன. இதை சமீபத்தில் ஒரு டிவியில் பேசிய ஒருவர் நினைவு கூர்ந்தார். அரசியல் கட்சிகள் யாருமே வரவில்லை. சீமான்தான் வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.

    வித்தியாசமான ஐடியா

    இந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள நாம் தமிழர்கட்சியினர் வித்தியாசமான ஒரு யோசனையை கையில் எடுத்து அசத்தியுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போது மின்சாரம்தான் பெரிய பிரச்சினை. எப்ப கரண்ட் வரும்னே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். காரணம் அத்தனை மின் வயர்களும் அறுந்து போய் விட்டன, கம்பங்கள் சாய்ந்து விட்டன. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து விட்டன.

    பாட்டில்களில் விளக்கு

    பாட்டில்களில் விளக்கு

    இந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பேராரூட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மண்ணெண்ணையை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பாட்டில்களில் நிரப்பி, திரி போட்டு விளக்கு போல ரெடி செய்து அனுப்புகின்றனர். இந்த ஐடியாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    NTK cadres are sending kerosene lights to Delta region as most of the areas are still awaiting for the power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X