சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'பரபரப்பு..' பானிபூரியில் புழு.. வடமாநில இளைஞரை கட்டி வைத்து.. தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்

Google Oneindia Tamil News

சென்னை : பட்டரவாக்கம் பகுதியில் பானிபூரியில் புழு இருந்ததால் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை நாம் தமிழர் கட்சியினர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    பானிபூரியில் கிடந்த புழு... வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த மக்கள்!

    சென்னை பட்டரைவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியின் தலைவர் சீமான் வருகையையொட்டி அப்பகுதியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர்.

    வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

    அங்கிருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அவ்வழியே பானிபூரி விற்று வந்த வடமாநில இளைஞரிடம் பானிபூரி வாங்கி உண்டனர். அப்போது பசியின் காரணமாக வட மாநிலத்தவர் தயார் செய்து தருவதற்கு முன்பு இளைஞர்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்.

    NTK members attacked North Indian workers as they found worms in Panipuri

    இதில் இளைஞர் ஒருவர் எடுத்த உருளைக்கிழங்கு துர்நாற்றம் வீசியதாகவும் அதில் புழு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த உருளைக்கிழங்கு வேக வைத்துப் பல நாட்கள் ஆனதும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை அந்க வட மாநில இளைஞர் சூடு செய்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் பானி பூரி விற்ற வடமாநிலத்தவரைக் கம்பியில் கட்டி வைத்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து வடமாநிலத்தவரை அழைத்துக்கொண்டு பானி பூரி தயார் செய்யும் வீட்டிற்குச் சென்ற அவர்கள் பானி பூரி விற்கும் முதலாளி மற்றும் இருவரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    NTK members attacked North Indian panipuri sellers. Chennai's latest crime news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X