சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரேமலதா ஒருபுறம்.. சுதீஷ் ஒருபுறம்.. குழப்பத்தில் நிர்வாகிகள்.. தேமுதிகவில் தொடங்கிய பிரச்சனை!

தொடர் கூட்டணி குழப்பங்கள் காரணமாக தேமுதிகவிற்குள் கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருவதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா ஒருபுறம்.. சுதீஷ் ஒருபுறம்.. குழப்பத்தில் தேமுதிக நிர்வாகிகள்- வீடியோ

    சென்னை: தொடர் கூட்டணி குழப்பங்கள் காரணமாக தேமுதிகவிற்குள் கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருவதாக செய்திகள் வருகிறது. முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கு இடையிலேயே பிரச்சனை நிலவி வருவதாக கூறுகிறார்கள்.

    தேமுதிக கட்சி லோக்சபா தேர்தலில் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் இருக்கிறது. அதிமுகவுடன் நடந்த எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தேமுதிகவுக்கு பெரிய பலன் அளிக்கவில்லை.

    அதேபோல் திமுகவும் மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்து மூடி இருக்கிறது. பேச்சுவார்த்தையில் தொடங்கி தேமுதிக - திமுக உறவும் தற்போது பெரிய சிக்கலில் முடிந்து உள்ளது.

    துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிக போராட்டம்.. சாலை மறியல்.. போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிக போராட்டம்.. சாலை மறியல்.. போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்

    தேமுதிக பிரச்சனை

    தேமுதிக பிரச்சனை

    தேமுதிக தொடர்ந்து மூன்று வாரமாக கூட்டணி குறித்து சரியாக ஒரு முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. பிரதமர் மோடியே கோபப்பட்டு கேட்கும் அளவிற்கு பாஜக - அதிமுக கட்சிகளை தேமுதிக அலையவிட்டு உள்ளது. விஜயகாந்த் நேரடியாக களமிறங்காத காரணத்தாலோ என்னவோ இன்னும் தேமுதிக கூட்டணி இறுதியாகாமல் இருக்கிறது.

    மோதல் ஏற்பட்டது

    மோதல் ஏற்பட்டது

    இந்த கூட்டணி குழப்பங்கள் காரணமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இடையே சண்டை வந்ததாக கூறுகிறார்கள். பிரேமலதா கொடுத்த சில பேட்டிகள் காரணமாக திமுக கூட்டணிக்கு மறுத்துவிட்டது. இல்லையென்றால் திமுகவுடன் இணைந்து இருக்கலாம் என்று சுதீஷ் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது தொடர்பான வாக்குவாதம் பிரச்சனையில் முடிந்து இருக்கிறது.

    பேச வரவில்லை

    பேச வரவில்லை

    இதையடுத்துதான் தற்போது தேமுதிக தொடர்பான கூட்டணி ஆலோசனைகளில் பிரேமலதா கலந்து கொள்ளாமல் இருக்கிறார். கடந்த மூன்று நாட்களாக தேமுதிக நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் சுதீஷ்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார். மாறாக பிரேமலதா செய்தியாளர்களை கூட சந்திக்காமல் ஒதுங்கியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றவர்கள்

    மற்றவர்கள்

    சகோதரர், சகோதரி இடையில் உள்ள பிரச்சனை தேமுதிகவின் மற்ற உறுப்பினர்கள் இடையிலும் பரவி இருக்கிறது. தேமுதிகவின் மூத்த உறுப்பினர்கள் பலர் ஏன் திமுகவை பகைத்து கொண்டீர்கள் என்று சுதீஷிடம் கோபமாக கேட்டு இருக்கிறார்கள். முக்கியமாக நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு எதிராக சுதீஷ் அளித்த பேட்டி காரணமாக தேமுதிகவில் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதனால்தான் ராஜினாமா

    இதனால்தான் ராஜினாமா

    இதையடுத்துதான் நேற்று தேமுதிக நிர்வாகி விஜய் பவுல்ராஜா திடீர் ராஜினாமா செய்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆவார் விஜய் பவுல்ராஜா. அதிமுக, திமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்தார்.

    English summary
    Issue of Too Much: Number of alliance talks made a huge rift inside the DMDK party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X