சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 216 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் (வெள்ளிக்கிழமை) 437 ஆக அதிகரித்தது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டனர். இதுதவிர வெளிமாநிலத்தில் இருந்துவந்து பல்வேறு மாவட்டங்களில் குவாரண்டைனில் உள்ளவர்களில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் எனில் நேற்று ஒரே நாளில் 349 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 216 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். காலையில் 148 பேரும், மாலையில் 68 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் பெரும்பாலோனார் கோயம்பேடு சந்தை உடன் தொடர்பு உடையவர்கள் ஆவர்.

ரயிலில் வந்த பயணிகளை காணவில்லை.. ஏறும் போது இருந்தவர்கள்.. இறங்கு போது மாயம்.. நீடிக்கும் மர்மம்ரயிலில் வந்த பயணிகளை காணவில்லை.. ஏறும் போது இருந்தவர்கள்.. இறங்கு போது மாயம்.. நீடிக்கும் மர்மம்

சென்னையில் 783 பேர்

சென்னையில் 783 பேர்

இதனிடையே தமிழகம் முழுவதும் இதுநாள் வரை 2599 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் 783 பேரும், கோவையில் 144 பேரும், அரியலூரில் 195 பேரும். திண்டுக்கல்லில் 83 பேரும், கள்ளக்குறிச்சியில் 69 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மதுரையில் 87

மதுரையில் 87

திருவள்ளூரில் 84 பேரும், விழுப்புரத்தில் 128 பேரும், திருப்பூரில் 114 பேரும், நாமக்கல்லில் 77 பேரும், சேலத்தில் 35 பேரும், ஈரோட்டில் 65 பேரும், திருச்சியில் 56 பேரும், மதுரையில் 87 பேரும், கரூரில் 14 பேரும், நீலகிரியில் 11 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும், தஞ்சாவூரில் 53 பேரும், தேனியில் 42 பேரும், தென்காசியில் 34 பேரும், வேலூரில் 20 பேரும், செங்கல்பட்டில் 68 பேரும் குணம் அடைந்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களில் நேற்று மாலை பலர் குணம் அடைந்துள்ளனர். அவர்களின் விவரம் இன்று தெரியவரும்.

5 மாவட்டங்களில் கொரோனா இல்லை

5 மாவட்டங்களில் கொரோனா இல்லை

மே 15ம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன இது தவிர சிவகங்கை மாவட்டமும் இந்த லிஸ்டில் வர வேண்டியவை. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தனிமைப்படுத்துதலில் ஒருவர் கொரோனாவுடன் இருப்பதால் இந்த லிஸ்டில் இல்லை. திருவாரூர் (3) நாகப்பட்டினம் (3), நீலகிரி (3), தர்மபுரி(4) புதுக்கோட்டை(5), ராமநாதபுரம் (9), ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் சிகிச்சை பெறுபவர்கள் இருப்பதால் விரைவில் கொரோனாவில் இருந்து இவை முழுமையாக மீள வாய்ப்பு உள்ளது.

கவனம் தேவையானவை

கவனம் தேவையானவை

அதேநேரம் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தால் விரைவில் தமிழகத்திற்குள் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்க்கலாம். அதற்கு பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அரசு பரிசோதனையை முடிந்த அளவு மிகவும் அதிகரிக்க வேண்டும்.

English summary
Number of COVID-19 positive patients discharged following treatment today 359, cuddalore is top the list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X