சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில் சேரவில்லை.. ஆனால் கேரள ஆளுநராகிறார்? ஓ.பி.எஸ் குறித்து கேரளாவில் பரபரக்கும் செய்தி!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலுக்கு பின் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கேரள மீடியாக்களில் செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலுக்கு பின் கேரள மாநில கவர்னராக ஓ.பி.எஸ் நியமிக்கப்பட வாய்ப்பு- வீடியோ

    சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலுக்கு பின் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கேரள மீடியாக்களில் செய்திகள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இன்னும் 4 தொகுதிகளுக்கு தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த சட்டசபை இடைத்தேர்தல்தான் தமிழகத்தில் அதிமுக அரசின் தலைவிதியை தீர்மானிக்க போகிறது. அதிமுக ஆட்சி தொடர்வதும், கவிழ்வதும் இந்த தேர்தலை பொறுத்தே உள்ளது.

    ஓபிஎஸ் பாஜக

    ஓபிஎஸ் பாஜக

    இந்நிலையில் கடந்த மாதம் வாரணாசியில் பிரதமர் மோடி பெரிய பிரச்சார பேரணி நடத்தினார். இதில் அதிமுகவில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்டது தேசிய அளவில் வைரலானது. ஓ.பி.எஸ் பாஜகவில் இணைய போகிறாரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

    நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்! நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்!

    விளக்கம்

    விளக்கம்

    ஆனால் இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். நான் அதிமுக தொண்டன். நான் எப்போதும் அதிமுக தொண்டனாகவே இருப்பேன். கடைசி மூச்சு வரை அதிமுகவில் இருப்பேன். நான் பாஜகவில் சேர்வதாக வெளியான செய்திகள் எல்லாம் வதந்தி என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய போகிறார். அவர் அறிக்கை பொய்யானது. அவர் கவர்னர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதிமுக ஆட்சி மாறிய பின் அவர் கவர்னர் பதவி வகிக்க சென்றுவிடுவார், என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

    என்ன செய்திகள்

    என்ன செய்திகள்

    இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலுக்கு பின் கேரளா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கேரள மீடியாக்களில் செய்திகள் வருகிறது. கேரளா ஆளுநராக இருக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பதவிக்காலம் முடிந்த பின் ஓ.பி.எஸ் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

    எப்படி எழுதி உள்ளனர்

    எப்படி எழுதி உள்ளனர்

    அதன்படி கேரளாவின் தற்போதைய ஆளுநர் தமிழர், அடுத்த ஆளுநரும் தமிழராக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவிற்கு நெருக்கமானவர். இவர் வடமாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. ஆந்திரா, கர்நாடகா செல்லவும் வாய்ப்பில்லை. அதனால் அவர் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எழுதியுள்ளனர்.

    இரண்டு விஷயம் நடந்தால்

    இரண்டு விஷயம் நடந்தால்

    ஆனால் இரண்டு விஷயங்கள் நடந்தால் மட்டுமே ஓ.பி.எஸ் கேரள கவர்னராக வாய்ப்புள்ளது என்றும் பேசிக்கொள்கிறார்கள். அதன்படி தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு ஆட்சி கவிழ வேண்டும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி தொடர வேண்டும். இந்த விஷயம் நடந்தால் மட்டுமே, ஓ.பி.எஸ் கேரள கவர்னராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன மறுப்பு

    என்ன மறுப்பு

    அதே சமயம் அதிமுகவில் சிலர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ் இப்போதுதான் அரசியலில் உச்சத்தில் இருக்கிறார். அவர் ஆளுநரானால், அரசியல் வாழ்க்கை நிறைவு பெறும். அதனால் இப்போது அவர் அந்த பதவிக்கு ஆசைப்பட மாட்டார் என்று தெரிவிக்கிறார்கள்.

    English summary
    O Paneerselvam may become Kerala Governor: Malayalam media's goes fire on the small hint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X