சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு அளிக்கப்படும்- ஓபிஎஸ் வாக்குறுதி

Google Oneindia Tamil News

சென்னை: நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு அளிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இலவசம் என்றாலே அதை புறக்கணிக்கும் குணம் கொண்டவர். இந்த நிலையில் அவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள சிஐடி நகரில் வீடு ஒதுக்கப்பட்டது.

அந்த வீடு அவருக்கு இலவசமாக தரப்பட்டாலும் அவர் தொடர்ந்து வாடகை செலுத்தியே வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவுள்ளதால் அங்கிருப்பவர்களை வெளியேற்ற தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியது.

நொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் நொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

வாடகை வீடு

வாடகை வீடு

இந்த நிலையில் மற்றவர்களை போல் எந்தவித ஆர்ப்பாட்டமும் கோரிக்கையும் இல்லாமல் நல்லகண்ணுவும் வீட்டை காலி செய்துவிட்டு கே கே நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார்.

18 வரை காலஅவகாசம்

18 வரை காலஅவகாசம்

மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவுக்கு மாற்று இடம் கூட வழங்காமல் மற்றவர்களை போல் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றியதை அரசியல் கட்சியினர் கண்டித்தனர். கக்கன் குடும்பத்தினருக்கு வரும் 18-ஆம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது அக்குடும்பத்தினர் திகைத்து வருகின்றனர்.

கக்கன் குடும்பத்தினர்

கக்கன் குடும்பத்தினர்

இந்த நிலையில் நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எளிமைக்கு சொந்தக்காரரான நல்லகண்ணு, தன்னை பற்றி கவலைப்படாமல் கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

உறுதி

உறுதி

நல்லகண்ணுவை தொலைபேசி மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடர்பு கொண்டார். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி காலி செய்துள்ள வீடுகளுக்கு பதிலாக மாற்று இடம் தரப்படும். அதன்படி, தங்களுக்கும், கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.

கொள்கை முடிவு கொள்கை முடிவு

கொள்கை முடிவு கொள்கை முடிவு

தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு நல்ல வீடு ஒதுக்கப்படும். இதுதொடர்பாக அரசும் கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்றார் ஓபிஎஸ்.

English summary
Deputy CM O.Paneerselvam says that new house will be provided for Nallakannu and Kakkan family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X