சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலை இருக்கு, நாளை வர முடியாதே.. இது ஓபிஎஸ் தரப்பு.. பிப்.5ம் தேதி வாங்க.. இது ஆறுமுகசாமி ஆணையம்

Google Oneindia Tamil News

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக மாட்டார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அப்போலோ மருத்துவக் குழுவினரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மனும் அனுப்பி இருந்தது.

o. paneerselvam will not face tomorrows enquiry summoned by arumugasamy commission

இந் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக நாளை ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜராக மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:கொடநாடு சம்பவத்தையும், ஜெயலலிதா மரணத்தையும் தொடர்பு படுத்தி பேசிவரும் மு.க.ஸ்டாலினையும், கனி மொழியையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும்.

மேலும், ஆணையத்தின் விசாரணையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாளை ஓ.பி.எஸ். ஆஜரானால், சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம் என்றும் கூறினார்.

English summary
Deputy Chief Minister O. Paneerselvem will not face Arumugasamy commissions enquiry tomorrow says sasikala advocate Rajasenthurpandi in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X