சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதே 2.. ஓபிஎஸ் போட்ட பிளான்.. பதவிக்காக தினகரன் காலில் விழுந்தார் - பற்றவைத்த ஜெயக்குமார்!

Google Oneindia Tamil News

சென்னை : ஓபிஎஸ் எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே குடும்பத்திடம் சென்று டிடிவி தினகரன் காலில் விழுந்து முதலமைச்சராக்குங்கள் என கேட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கும் இடையே அதிமுகவை அழிக்கவேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசிய ஜெயக்குமார், மழைநீர் வடிகால் பணிகள் 80% முடிவடைந்து விட்டதாக கூறுகிறார் முதலமைச்சர். ஆனால், பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால்களின் பணி குறித்த நிலை வெட்ட வெளிச்சமாகிவிடும் எனத் தெரிவித்தார்.

அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி.. எப்ப வேணாலும் ரிலீஸ்!.. பயமுறுத்தும் ஓபிஎஸ் தரப்பு அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி.. எப்ப வேணாலும் ரிலீஸ்!.. பயமுறுத்தும் ஓபிஎஸ் தரப்பு

தொண்டர்களை அல்ல

தொண்டர்களை அல்ல

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் இடையே கருத்து யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், "மக்கள் பிரச்சனைகளுக்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியது யார்? ஓபிஎஸ் அறிக்கை, டிவிட்டரை தான் நம்புகிறார் தொண்டர்களை அல்ல.

2 தொகுதிகளில் தோல்வி

2 தொகுதிகளில் தோல்வி

2019ல் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது 9 தொகுதிகளில் தான் அதிமுக வென்றது. மற்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்த 22 தொகுதிகளில், தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால், எம்.பி தேர்தலில் அந்த 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வாங்கி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

ஓபிஎஸ் பிளான்

ஓபிஎஸ் பிளான்

ஏன் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதியில் எம்.எல்.ஏக்களை ஜெயிக்க வைக்கவில்லை? தோற்றால் ஆட்சி இருக்காது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கக் கூடாது என ஓபிஎஸ் திட்டமிட்டார். ஆனால், நாங்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஓபிஎஸ் மட்டும் தான் ஜெயித்தார். வீராதி வீரர், சூராதி சூரர் எனச் சொல்பவர், சொந்த மாவட்டத்திலேயே ஏன் அதிமுகவினரை ஜெயிக்க வைக்கவில்லை?

 எழுதப்படாத ஒப்பந்தன்

எழுதப்படாத ஒப்பந்தன்

அதிமுக ஆட்சிக்கு எதிராகவே ஓட்டு போட்டார். ஓ.பன்னீர்செல்வம் எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே குடும்பத்திடம் சென்று, டிடிவி தினகரனின் காலில் விழுந்து முதலமைச்சராக்குங்கள் என கேட்டார். மு.க.ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கும் இடையே அதிமுகவை அழிக்க வேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது." என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

English summary
Former AIADMK Minister Jayakumar has criticized that O Panneerselvam goes to the same family it opposes previously and falls on its feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X