சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலை இருக்கும் இடமே எங்கள் ’பழனி’மலை! அன்றே கணித்த ஓபிஎஸ்! ஓடிவரும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஷாக் சேலம்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் தற்காலிமாகவே ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் தற்போதே பல ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என அவரது அணிக்கும் தாவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    அதிமுகவின் உண்மை தலைமை யார்? OPS? EPS? Sasikala?

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பத்தில் அதிர்ஷமும் ஆதரவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தாலும் திடீரென மாறிய அரசியல் காலநிலையால் தற்போது அதிர்ஷ்ட காற்று ஓபிஎஸ் பக்கம் வீசி இருக்கிறது.

    ஆதரவாளர்கள் எண்ணிக்கை சரிவு, மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, பொதுக்குழுவில் நடந்த அவமானம் என அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

    அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்! அசர மறுக்கும் எடப்பாடி! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிமுகவில் நடப்பது என்னஅழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்! அசர மறுக்கும் எடப்பாடி! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிமுகவில் நடப்பது என்ன

    அதிமுக மோதல்

    அதிமுக மோதல்

    ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனக்கான பதவி காலம் இருக்கிறது எனவும், தனது அனுமதி இல்லாமல் ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை முன்வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

     பொதுக்குழு கூட்டம்

    பொதுக்குழு கூட்டம்

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுக்குழு கூட்டம் குறித்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லாது என்ற அதிரடி தீர்ப்போடு ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரும் என கூறினார். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்பதோடு அவரால் நியமனம் செய்யப்பட்ட பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், தலைமை கழக நிர்வாகிகளின் நியமனமும் செல்லாததாக ஆகிவிட்டது.

    கடும் அதிர்ச்சி

    கடும் அதிர்ச்சி

    இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தில் இருக்கிறார். அதோடு எடப்பாடி பழனிசாமியின் கை அதிமுகவில் ஓங்கி இருந்தபோதே சில ஒன்றிய செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் மேலும் பல ஒன்றிய செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி வருகின்றனர்.

    அணி தாவும் நிர்வாகிகள்

    அணி தாவும் நிர்வாகிகள்

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவு ஒன்றிய செயலாளராக இருந்த பசும்பொன், வத்தலகுண்டு மணி தற்போது வேடசந்தூர் சுப்பிரமணியன என திண்டுக்கல்லில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் தற்போது ஓ,பன்னீர் செல்வத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்கும் போது எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய யாராக அதிமுகவில் எம்ஜிஆர் கண்டெடுத்த சின்னமான இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே தங்களது ஆதரவு எனக் கூறி வருகின்றனர்.

    தீவிர ஆலோசனை

    தீவிர ஆலோசனை

    அந்த வகையில் சமூக வலைதளங்களிலும் கடந்த ஆண்டு சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட தற்போது அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இப்படி அரசியல் காலநிலை மாறி மாறி வரும் நிலையில் ஓபிஎஸ்-க்கு அதிமுகவிற்குள் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் ஓபிஎஸ் உடன் இணைந்து போவதே நல்லது என அறிவுரை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

    English summary
    It has been reported that Edappadi Palaniswami's side is very dissatisfied with the ruling in favor of the OPS side in the AIADMK, while many union secretaries, general committee members and former MLAs are joining his team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X